விண்ணை முட்டும் விலைவாசி கழுத்தை நெரிக்கும் | Dinamalar

தமிழ்நாடு

விண்ணை முட்டும் விலைவாசி கழுத்தை நெரிக்கும்

Added : நவ 26, 2021
Share
மழையால் தக்காளி விலை தான் தங்கம் போல உயர்கிறது என ஆறுதல்பட முடியாமல் எல்லா காய்கறிகளின் விலையும் பலமடங்கு உயர்ந்து விட்டது. மார்க்கெட் செல்லும் இல்லத்தரசிகளின் பைகள் இப்போதெல்லாம் காய்கறிகளால் நிரம்புவதே இல்லை. கைநிறைய காசை செலவழித்து பெயருக்கு காய்கறிகள் வாங்குவது போலிருக்கிறது என்கின்றனர் குடும்பத்தலைவிகள் .கூடுதல் நிதிச்சுமைபரமேஸ்வரி, சிவாஜி நகர்,தேனி:

மழையால் தக்காளி விலை தான் தங்கம் போல உயர்கிறது என ஆறுதல்பட முடியாமல் எல்லா காய்கறிகளின் விலையும் பலமடங்கு உயர்ந்து விட்டது. மார்க்கெட் செல்லும் இல்லத்தரசிகளின் பைகள் இப்போதெல்லாம் காய்கறிகளால் நிரம்புவதே இல்லை. கைநிறைய காசை செலவழித்து பெயருக்கு காய்கறிகள் வாங்குவது போலிருக்கிறது என்கின்றனர் குடும்பத்தலைவிகள் .
கூடுதல் நிதிச்சுமைபரமேஸ்வரி, சிவாஜி நகர்,தேனி: காஸ், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் நடுத்தர குடும்பத்தினருக்கு அதிக சிரமம் ஏற்படுகிறது. பொதுவாக கார்த்திகை மாதத்தில் காய்கறி விலைகள் அதிகரிக்கும். இருப்பினும் தற்போது தக்காளியின் விலை கிலோ ரூ.120 என்பது அதிர்ச்சியூட்டுகிறது. எங்கள் குடும்பத்தில் நாங்கள் 3 பேர். காஸ் சிலிண்டர் 3 மாதம் வரை பயன்படும். ஆனால் பெரிய குடும்பங்களில் சிலிண்டர் விரைவாக காலியாகிவிடும். கடந்த ஆண்டுகளில் ரூ.700 விற்க காஸ் தற்போது 950 வரை உயர்ந்து விட்டது. இதனால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. தற்போது மானியமும் சரியாக கிடைப்பது இல்லை. இதனால் காஸ், பெட்ரோல், டீசல், காய்கறி விலை குறைந்தால் நன்றாக இருக்கும்.
காஸ் மானியம் வருகிறதாசர்மிளா, காமயகவுண்டன்பட்டி: உணவு பொருள்கள்,பலசரக்கு, காய்கறிகள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் ஓராண்டில் லிட்டர் 230 முதல் ரூ.360 வரை உயர்ந்துள்ளது. நடுத்தர குடும்பத்திற்கு மாதம் 2 வரை லிட்டர் பயன்படுத்துவோம். விலை உயர்வு கூடுதல் சுமையாகி விட்டது. இப்படி ஒவ்வொரு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. காஸ் விலை ரூ. ஆயிரத்தை தொட்டுள்ளது. காஸ் மானியம் வங்கி கணக்கில் வரவு ஆகிறதா என தெரியவில்லை. அன்றாடம் பயன்படுத்தும் குளியல் சோப், ஆடைகள் என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. ரேஷன் கடைகள் இல்லாவிட்டால் பல குடும்பங்கள் நிலைமை மோசமாகி விடும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளது என்கின்றனர். விலை உயர்வை தடுக்க வேண்டும்.
அரசு விலை நிர்ணயம் செய்யனும்எஸ்.கோமதி, கூடலூர்: காய்கறி, மளிகைப் பொருள்கள் விலை உயர்வை நேரடியாக சந்திக்கக் கூடியவர்கள் எங்களைப் போன்ற குடும்பத்தலைவிகள்தான். தற்போது தக்காளி விலை கிலோ 100 க்கு மேல் விற்பனை ஆகிறது. இருந்தாலும் இது இல்லாமல் சாம்பார் உள்ளிட்ட எந்த உணவுப் பொருட்களும் செய்ய முடியாத நிலை உள்ளது. இதை வாங்கியே ஆகவேண்டும் என்ற நிலையில், நடுத்தர மக்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். விவசாயம் அதிகம் நிறைந்த கூடலூரிலும் இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காய்கறி, மளிகை பொருட்கள் விலை பல மடங்கு அதிகரித்த போதிலும், எங்களின் வருவாய் அதிகரிக்கவில்லை. இதனால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய முன்வரவேண்டும்.
ரூ.500க்கு காய் வாங்கியும் பை நிறையலஎன்.சாந்தீஸ்வரி, பெரியகுளம்: கடந்த மாதம் தக்காளி கிலோ ரூ.15க்கும், கத்தரிக்காய் ரூ.20 விற்றது. தற்போது தக்காளி ரூ.80 முதல் ரூ.100 ஆகவும், கத்தரிக்காய் ரூ.70 முதல் ரூ.80 என அனைத்து காய்களும் விலை உயர்ந்துவிட்டது. சில காய்கறி கடைகளில் நாம் கேட்கும் முதல் காய்கறி விலையை குறைத்து, மற்ற காய்களுக்கு விலை ஏற்றி நுாதனமாக விற்கின்றனர். பெட்ரோல் விலை உயர்வால் சைக்கிளுக்கு மாறிய நிலையில், காஸ் விலை உயர்வால் விறகு அடுப்புக்கு மாற உள்ளோம்.
சில மாதங்களுக்கு முன் ரூ.100 கொடுத்து பைநிறைய காய்கறிகள் வாங்கிய நிலை மாறி, தற்போது ரூ.500 க்கு அரை பை காய்கறிகள் வாங்கும் நிலை உள்ளது. காய்கறிகடைகளில் விலை நிர்ணயம் பட்டியல் எழுதி வைக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வருமானம் உயரவில்லை

பா.வேலம்மாள், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி: இரு ஆண்டுக்கு முன் ரூ.600 ஆக இருந்த காஸ் தற்போது ரூ.ஆயிரத்தை நெருங்கி விட்டது. அன்றாட உணவுக்கான காய்கறிகளில் தக்காளி ரூ.130, கத்தரிக்காய் வெண்டை, மொச்சை, பாகற்காய் உட்பட எந்த காய் வாங்கினாலும் ரூ.80 முதல் 100 வரை உயர்ந்துள்ளது. பருப்பு, எண்ணெய், மசாலாப்பொருட்கள் அனைத்தும் கடந்த இரு மாதத்தில் 20 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்து விட்டது. அனைத்து பொருட்கள் விலை உயர்ந்தும் வருவாய் உயரவில்லை. தொழிலாளர் குடும்பங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் பொருட்களும் தரமில்லை. விலை வாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் அரசு அக்கறை காட்டவில்லை. விலைவாசி உயர்வுக்கான காரணத்தை கண்டுபிடித்து கட்டுப்படுத்த வேண்டும்.


ஆப்பிள் விலையில் தக்காளி


கே.கிருஷ்ணவேணி, போடி: குழம்பிற்குதக்காளி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இரு மாதத்திற்கு முன்பு தக்காளி கிலோ ரூ.20 ஆக இருந்தது. தற்போது ஆப்பிளுக்கு இணையாக கிலோ 140 விற்கிறது. கத்தரிக்காய், வெண்டை காய்கறிகளும் அதிகளவு விலை உயர்ந்துள்ளது. ரேஷன் இலவச அரிசியில் கஞ்சி வைத்து சாப்பிடலாம். விண்ணை முட்டும் வகையில் காய்கறிகள் மட்டுமின்றி காஸ் சிலிண்டர் ரூ.ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசியமான பலசரக்கு, இதனால் நடுத்தர, அன்றாட கூலி வேலை செய்யும் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் இணைந்துநடவடிக்கையும் எடுக்கவேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X