பொது செய்தி

தமிழ்நாடு

கேரளா-தமிழகம் பஸ் போக்குவரத்து இயக்கப்படுமா

Added : நவ 26, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா- - தமிழகம் இடையே பஸ் போக்கு வரத்து இயக்குவது குறித்து தமிழக அரசு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி, பாலக்காடு,திருவனந்தபுரம் உள்பட சில மாவட்டகளுக்கு தமிழகத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. தமிழகத்திற்கும் கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அவை கொரோனாவால் ஒன்றரைஆண்டுகளுக்கு

மூணாறு : கேரளா- - தமிழகம் இடையே பஸ் போக்கு வரத்து இயக்குவது குறித்து தமிழக அரசு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடுக்கி, பாலக்காடு,திருவனந்தபுரம் உள்பட சில மாவட்டகளுக்கு தமிழகத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. தமிழகத்திற்கும் கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அவை கொரோனாவால் ஒன்றரைஆண்டுகளுக்கு மேலாக முடங்கின. தற்போது கேரள,தமிழக எல்லை வரையிலும் இரு மாநில அரசு பஸ்கள் வந்துசெல்கின்றன.

இரு மாநிலங்களுக்கு இடையே நேரடியாக பஸ் இயக்க கோரிக்கைஎழுந்த நிலையில்கேரளா தவிர பிற மாநிலங்களுக்கு பஸ்களை இயக்குமாறுஅக்., இறுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின்உத்தரவிட்டார்.தற்போது கேரளாவில் கொரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்ததால் இரு மாநிலங்களுக்கு இடையே நேரடியாக பஸ் இயக்க வேண்டும் எனவும்கேரள அரசு பஸ்களை இயக்க தயாராகஉள்ளதால் தமிழக அரசு உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை எழுந்து உள்ளது.----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X