பொது செய்தி

தமிழ்நாடு

மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சம் பேர் பயன்

Added : நவ 26, 2021
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த, 11வது மெகா தடுப்பூசி முகாமில், 12.01 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதுவரை 77.02 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழகத்தில் இதுவரை நடந்த, 10 மெகா தடுப்பூசி முகாம்களில், 1.94 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.வடகிழக்கு பருவமழை காரணமாக, 18
 மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சம் பேர் பயன்


சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த, 11வது மெகா தடுப்பூசி முகாமில், 12.01 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதுவரை 77.02 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட செய்தி குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை நடந்த, 10 மெகா தடுப்பூசி முகாம்களில், 1.94 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.வடகிழக்கு பருவமழை காரணமாக, 18 மாவட்டங்களில் மழை பெய்த போதிலும், 11வது மெகா முகாமில், 12 லட்சத்து 1,832 பேர் பயன் அடைந்துள்ளனர். இதில், முதல் தவணையாக 4 லட்சத்து 52 ஆயிரத்து 969 பேருக்கும்; இரண்டாவது தவணையாக, 7 லட்சத்து 48 ஆயிரத்து 863 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை, 77.02 லட்சம் பேர் முதல் தவணையும், 41.60 லட்சம் பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டாலும்!
முன்னதாக, சென்னை தங்கசாலையில் நடந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்ட, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

அதிக தடுப்பூசி போட்ட நாடுகளில் எல்லாம் உயிரிழப்புகள் குறைந்து வருகின்றன. நடிகர் கமல் இரண்டு தவணை தடுப்பூசி போட்டும், தொற்றால் பாதிக்கப்பட்டார். அனால், அவர் நலமுடன் உள்ளார். தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று வரும்; ஆனால் உயிரிழப்பு ஏற்படுவது குறைவு.இனி, வாரத்தில் இரண்டு நாட்களுக்கு பதிலாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X