கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.பி., மீதான கொலை வழக்கு கூடுதல் எஸ்.பி., கண்காணிக்க உத்தரவு

Added : நவ 26, 2021
Share
Advertisement
சென்னை : தி.மு.க., - எம்.பி.,க்கு எதிரான கொலை வழக்கு விசாரணையை, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி., கண்காணிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில், தி.மு.க., - எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றிய தொழிலாளி கோவிந்தராசு, மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.தந்தையின் மரணத்தில் சந்தேகம்

சென்னை : தி.மு.க., - எம்.பி.,க்கு எதிரான கொலை வழக்கு விசாரணையை, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி., கண்காணிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில், தி.மு.க., - எம்.பி., ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றிய தொழிலாளி கோவிந்தராசு, மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எம்.பி., ரமேஷ் உள்ளிட்டோர் தான் மரணத்துக்கு காரணம் என்றும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், போலீசில் புகார் அளித்தார்.

இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை பெற்ற பின், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தி.மு.க., எம்.பி., ரமேஷ், அக்டோபர், 11 ல், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்; கடலுார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, ஜாமினில் உள்ளார்.

வழக்கை, சி.பி.சி.ஐ.டி., முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில் செந்தில்வேல் வழக்கு தொடர்ந்தார்.சி.பி.சி.ஐ.டி., தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''விசாரணை முறையாக நடக்கிறது. புதிய விசாரணை அதிகாரியாக, விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., அதிகாரி சுந்தரராஜன் நியமிக்கப்பட உள்ளார்,'' என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், 'புதிய அதிகாரி விசாரணையை தொடரலாம்; விசாரணையை விழுப்புரம் கூடுதல் எஸ்.பி., கண்காணிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X