பொது செய்தி

தமிழ்நாடு

விலை உயர்வில் தக்காளி

Added : நவ 26, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.120 என உச்சத்தில் விற்கிறது.மழையால் செடியிலேயே காய்கள் அழுகி, பூ உதிர்ந்தால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.தேனி மாவட்டத்தில் வழக்க மாக 3000 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படும். நடப்பு ஆண்டில் 2400 ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டது. இதில் 1410 ஏக்கரில் அறுவடை முடிந்தும், 990 ஏக்கரில் தக்காளி சாகுபடியாக உள்ளது. தற்போது வரை 10

தேனி : தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.120 என உச்சத்தில் விற்கிறது.மழையால் செடியிலேயே காய்கள் அழுகி, பூ உதிர்ந்தால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வழக்க மாக 3000 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படும். நடப்பு ஆண்டில் 2400 ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டது. இதில் 1410 ஏக்கரில் அறுவடை முடிந்தும், 990 ஏக்கரில் தக்காளி சாகுபடியாக உள்ளது. தற்போது வரை 10 ஏக்கருக்கு காப்பீடு செய்துள்ளனர். காப்பீட்டுக்கு பிப்.,28 கடைசிநாளாகும்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் தக்காளி அழுகி சேதமடைய துவங்கியுள்ளது. இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்தும் விவசாயிகளுக்கு பலன் இல்லை என புலம்புகின்றனர். தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கருத்து:குறைந்தபட்ச ஆதார விலை எம்.பழனிச்சாமி, விவசாயி, வாய்கால்பட்டி: 45 ஆண்டுகளாக தக்காளி விவசாயம் செய்கிறேன்.

மழையால் திடீர் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது விலை கிடைத்தது தற்காலிகமானது தான். மழையால் உற்பத்தி குறைந்த நிலையிலும், ஒரு பெட்டி (15 கிலோ) முதல் தர தக்காளி ரூ.1200க்கும், அதை விட குறைந்த தரம் ரூ.950 வரை கொள்முதல் செய்கின்றனர். இதேபோல் மழை இல்லாத நேரத்தில் உற்பத்தி அதிகரிக்கும்.

அப்போது விலை குறைந்து, நஷ்டம் ஏற்படும். அப்போது முதலுக்கு மோசம் ஆகிறது. இதனை தவிர்க்க தக்காளி பயிரிடும் விவசாயிகளை ஒன்றிணைத்து, கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு பெட்டிக்கு ரூ.500 நிர்ணயித்து விற்பனை செய்ய வேண்டும்.”, என்றார்.

விவசாயிக்கு பயன் இல்லை

முத்துராமலிங்கம், விவசாயி, முத்துலாபுரம்: தக்காளி விலை விண்ணைத் தொடுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பயனில்லை. ஏக்கருக்கு செலவு ரூ. 40 ஆயிரம் ஆகும். சாகுபடி செய்த 45 வது நாளிலிருந்து 120 வது நாள் வரை பறிக்கலாம். ஏக்கருக்கு 80 டன் வரை கிடைக்கும். தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்விற்கு காரணம் பெய்து வரும் மழை தான். இதனால் மகசூல் பாதியாக குறைந்துவிட்டது. 12 முதல் 14 கிலோ கொண்ட பெட்டியின் விலைஆயிரத்து 100 ஆக கிடைக்கிறது. மகசூல் குறைந்துள்ளதால், விலை கிடைத்தும் பயனில்லை.

வியாபாரிகளுக்கு லாபம்

ஆர்.டி.சரவணன், ஏத்தக்கோவில், ஆண்டிபட்டி: மழையால் தக்காளி விளைச்சல் பாதித்தது. வரத்து குறைவு, தட்டுப்பாட்டை சாதகமாக்கி வியாபாரிகள் விலையை கூட்டுகின்றனர். விவசாயிகள் 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டியை ரூ.800க்கு கமிஷன் கடையில் கொடுக்கின்றனர். இதில் கிலோ ரூ.45 முதல் 55 வரை விற்கலாம். ஆனால் கிலோ ரூ.140 விற்கின்றனர். இது வரை இல்லாத விலை உயர்வு. விலை உயர்வால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை. பொதுமக்கள் பாதிப்பு. வியாபாரிகள்தான் கொள்ளைலாபம் பார்க்கின்றனர். விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

காய்கறிகளுக்கு விலை நிர்ணயம்

கொடியரசன், விவசாயி, கூடலூர்: தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்து விலை அதிகரித்தால் விவசாயிகளுக்கு லாபம். மழையால் பூ பிடிக்கும் பருவத்தில் இருந்த தக்காளி செடிகளில் பூ உதிர்ந்து பழம் இல்லாமல் வெறும் செடியாக உள்ளது. தற்போது விலை அதிகமாக இருந்தும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அரசு காய்கறிகளையும் கொள்முதல் செய்து அதை ரேஷன் கடை மூலம் விற்பனை செய்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. வெங்காயம்,தக்காளி விலை உயரும் போது அதைப் பற்றி மட்டும் பேசுவது என்று இல்லாமல் அனைத்து காய்கறிகளையும் அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

விளைச்சல் இல்லை

கே.முத்தையா, விவசாயி, சிலமலை: மழைக்கு முன் தினமும் 50 கிலோ மேல் தக்காளி பழம் எடுத்தேன். 15 கிலோ பெட்டிக்கு ரூ.300 வரை வாங்கினர். மழைக்கு முன்விலை குறைவாக இருந்தாலும் விளைச்சல் இருந்ததால் லாபம் கிடைத்தது. மழையால் செடிகள் நீரில் மூழ்கியுள்ளது. காய்த்திருந்த தக்காளி அழுகிவிட்டது. ஏக்கருக்கு 10 கிலோ கூட கிடைப்பதில்லை. சிரமத்தோடு பறித்து விற்பனை செய்தாலும் எடுப்பு கூலி கூட பயன் இல்லாமல் உள்ளது. இன்னும் விலை உயரும். விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.---

பசுமை குடில் ஊக்குவிக்க வேண்டும்

எம்.வெற்றிவேல் (விவசாயி), பெரியகுளம்: 35 ஆண்டுகளுக்கு பின் தொடர் மழையால் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. பசுமைக்குடிலில் நாட்டுத்தக்காளியை வளர்க்கலாம். தோட்டக்கலை துறை ஊக்குவிப்பது இல்லை. பசுமை குடிலுக்கு அரசு மானியம் வழங்கி வரும் நிலையில், வழிகாட்டியிருந்தால் தட்டுப்பாடு வந்திருக்காது. வியாபாரிகள் தோட்டத்தில் கிலோ ரூ.40க்கு வாங்கி ரூ.100 விற்கின்றனர். குளிர்சாதன கிடங்கில் தக்காளி பதுக்கியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் விலை குறையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X