வெங்காயத்தால் விரைவில் 'கண்ணீர்' வரும்! முன் கூட்டியே சொல்கிறார் செல்லமுத்து

Added : நவ 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பல்லடம் : ''தக்காளியை தொடர்ந்து வெங்காயமும் விலை உயர்வால் விரைவில் கண்ணீர் விட வைக்கும்.'' என, செல்லமுத்து எச்சரித்துள்ளார்.உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து நமது நிருபரிடம் கூறியதாவது:அதிக மழையால், முன்கூட்டியே பயிரிட்ட தக்காளி செடிகள் சேதமடைந்தது. மேலும், நோய் தாக்குதல், அழுகல், மற்றும் இடைத்தரகர்களின் தலையீடு ஆகியன தக்காளி விலை உயர்வுக்கு
 வெங்காயத்தால் விரைவில் 'கண்ணீர்' வரும்!  முன் கூட்டியே சொல்கிறார் செல்லமுத்து



பல்லடம் : ''தக்காளியை தொடர்ந்து வெங்காயமும் விலை உயர்வால் விரைவில் கண்ணீர் விட வைக்கும்.'' என, செல்லமுத்து எச்சரித்துள்ளார்.

உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து நமது நிருபரிடம் கூறியதாவது:

அதிக மழையால், முன்கூட்டியே பயிரிட்ட தக்காளி செடிகள் சேதமடைந்தது. மேலும், நோய் தாக்குதல், அழுகல், மற்றும் இடைத்தரகர்களின் தலையீடு ஆகியன தக்காளி விலை உயர்வுக்கு காரணம்.கிலோ ஒரு ரூபாய்க்கு விற்றபோதும், விற்பனை ஆகாது, என தெரிந்து செடியிலேயே தக்காளியை விட்டபோதும், விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை. விலை உயர்ந்தபோதுதான் விவசாயிகளின் மதிப்பு தெரிய வருகிறது.

தமிழகத்தில் உள்ள காய்கறி பயிர்களின் உற்பத்தி, பாதிப்பு, இருப்பு, மார்கெட் நிலவரம் அனைத்து விவரங்களும் அரசிடம் உள்ளது.வேளாண் துறை, வேளாண் பல்கலை இணைந்து, இது போன்ற பாதிப்புகள் வரும் என்பதை முன்கூட்டியே கணித்து கூறுவதன் அடிப்படையில், அரசு சுதாரித்து இருக்க வேண்டும்.காய்கறிகள் விலை வீழ்ச்சி அடையும்போது ஏற்றுமதியும், விலை உயரும்போது இறக்குமதியும் செய்தால் மட்டுமே இதை நம்பியுள்ள விவசாயிகள் பயனடைவர்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் வெங்காயம் இன்னும் ஒரு மாதத்துக்கு மட்டுமே வரும். அதற்குள் உற்பத்தி மேற்கொண்டால் மட்டுமே, வெங்காயமும் தட்டுப்பாடின்றி கிடைக்கும். இல்லாவிடில், தக்காளியை போல் விலை உயர்ந்து விரைவில் வெங்காயமும் கண்ணீர் விடவைக்கும்.அரசு திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே, விளை பொருட்களின் விலை உயர்வை தடுக்க முடியும்.

இவ்வாறு, செல்லமுத்து கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yesappa - Bangalore,இந்தியா
26-நவ-202112:28:25 IST Report Abuse
Yesappa போங்க சார்.. எங்க தல ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார் .. அப்பறம் உரிமை பணம் மாதம் ஆயிரம் தருவார். எங்களுக்கு அது போதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X