அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி: சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதிலடி

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (89)
Share
Advertisement
சென்னை: 'ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி; அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள்' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.நகைச்சுவைதமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி உட்பட நான்கு நகரங்களில் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர்
BJP, Annamalai, P Chidambaram

சென்னை: 'ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி; அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள்' என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.


நகைச்சுவை


தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி உட்பட நான்கு நகரங்களில் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திறந்து வைத்தார். இதையடுத்து, 'கட்சி எழும்புகிறதோ இல்லையோ; கட்டடங்கள் எழும்புகின்றன. நான்கு நகரங்களில், மாவட்ட கட்சியின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலக கட்டடங்களை, ஒரே நாளில் திறக்கும் கட்சிக்கு பாராட்டுகள்' என, காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை: ஐயா, ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி. அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்களுடைய நகைச்சுவையை தாண்டி, நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கு தெரியும்; தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஊழல்கள் பல செய்து கட்டடங்களை எழுப்பியதால், சிறையில் இருக்க வேண்டிய நிலையில், பிணையில் இருந்து கட்சியை காலி செய்து, தொண்டர்களை நடு தெருவில் நிறுத்தியவர்கள் காங்., தலைவர்கள். விமர்சனம்இவர்கள், தொண்டர்களுக்காக பெருமதிப்புள்ள கட்டடங்களை அர்ப்பணிக்கும் தலைவர்கள் உள்ள கட்சியை விமர்சனம் செய்வதில் வியப்பில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-நவ-202104:58:04 IST Report Abuse
ராஜா இலக்கோடு கொள்ளை அடித்து சேர்த்து வைத்துவிட்டு பேசுகிறார் இந்த களவாணி.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-நவ-202101:26:37 IST Report Abuse
DARMHAR ப. சிதம்பரமா? அவரது தான்தோன்றி உளறல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
26-நவ-202123:35:05 IST Report Abuse
J. G. Muthuraj 'நாங்கள்' வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் யார்?.....அதிகாரத்திலுள்ளவர்கள் வளர்கிறீர்கள்....மக்கள் வளர்ச்சி??? உச்சகட்ட வறுமையில் இருக்கும் நான்கு மாநிலங்களும், பிஜேபியினாலோ, பிஜேபியின் ஆதரவினாலோ ஆட்சி செய்யப்படுகின்றன .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X