யானை தந்தம் கடத்திய மூன்று பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானை தந்தம் கடத்திய மூன்று பேர் கைது

Added : நவ 26, 2021
Share
தர்மபுரி : தர்மபுரியில் காரில் யானை தந்தம் கடத்திய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில், சட்டத்துக்கு புறம்பாக யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக, வனஉயிரின குற்றப்பிரிவு தென்மண்டல இயக்குனருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தர்மபுரி வனத்துறையினர் மற்றும் வனஉயிர் குற்றத்தடுப்பு போலீசார் இணைந்து, நேற்று தர்மபுரி அடுத்த சோகத்துார் கூட்டுரோடு


தர்மபுரி : தர்மபுரியில் காரில் யானை தந்தம் கடத்திய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில், சட்டத்துக்கு புறம்பாக யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக, வனஉயிரின குற்றப்பிரிவு தென்மண்டல இயக்குனருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தர்மபுரி வனத்துறையினர் மற்றும் வனஉயிர் குற்றத்தடுப்பு போலீசார் இணைந்து, நேற்று தர்மபுரி அடுத்த சோகத்துார் கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் இருந்து, இரண்டு யானை தந்தங்கள் கடத்தி செல்லபட்டது தெரியவந்தது. இதையடுத்து பென்னாகரம் அடுத்த பவளந்துாரை சேர்ந்த சின்னசாமி, 29, பிலிகுண்டுலுவை சேர்ந்த வினோத், 22, நெருப்பூரை சேர்ந்த கார்த்திக், 32 ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு தந்தங்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சேட்டு, சக்திவேல் ஆகியோரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X