தேவாலய தாக்குதல் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கொழும்பு : ''இலங்கை தேவாலய தாக்குதல் குறித்து உளவுத் துறை எச்சரித்தும், முந்தைய அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டது,'' என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குற்றஞ்சாட்டியுள்ளார்.கடந்த 2019 ஈஸ்டர் தினத்தன்று நம் அண்டை நாடான இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 270 பேர் பலியாயினர்.ஐ.எஸ்., பயங்கரவாத
 தேவாலய தாக்குதல் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு

கொழும்பு : ''இலங்கை தேவாலய தாக்குதல் குறித்து உளவுத் துறை எச்சரித்தும், முந்தைய அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டது,'' என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2019 ஈஸ்டர் தினத்தன்று நம் அண்டை நாடான இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 270 பேர் பலியாயினர்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.அப்போது இலங்கை அதிபராக இருந்த சிறிசேன, தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து உளவுத் துறை எச்சரித்தும், இலங்கை அதிபர், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் தாக்குதலை தடுக்கத் தவறியதாக விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்தது.

இது குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியதாவது:
தேவாலயத் தாக்குதலை முந்தைய அரசு தடுக்கத் தவறி விட்டது. அவர்கள் தேசப் பாதுகாப்பை பாழ்படுத்தி விட்டனர். முன்னாள் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என அனைவரையும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பாளி ஆக்க வேண்டும் என விசாரணைக் குழு அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேவாலயத் தாக்குதல்களை தடுக்கத் தவறியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு சிலர் நெருக்கடி கொடுக்கின்றனர்.அதை நான் ஏற்கத் தயார். பார்லி.,யை கூட்டி சம்பந்தப்பட்டவர்களின் சிவில் உரிமையை பறிக்க நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் தற்போது இப்பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளதால், அதில் தலையிட அரசு விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X