சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுவர் இடிந்து இருவர் பலி

Added : நவ 26, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் வீட்டு சுவர் இடிந்து 5 வயது சிறுவன், மூதாட்டி பலியாகினர். தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில், 45 கூரை வீடுகளும், 14 ஓட்டு வீடுகளும் இடிந்து சேதமடைந்தன. சின்ன முத்தாண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சலீம்; இவரது மகன் அசாருதீன், 5. வீட்டில் நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தனர். வீட்டின்
 சுவர் இடிந்து இருவர் பலி


தஞ்சாவூர் : தஞ்சாவூரில் வீட்டு சுவர் இடிந்து 5 வயது சிறுவன், மூதாட்டி பலியாகினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில், 45 கூரை வீடுகளும், 14 ஓட்டு வீடுகளும் இடிந்து சேதமடைந்தன. சின்ன முத்தாண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சலீம்; இவரது மகன் அசாருதீன், 5. வீட்டில் நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தனர். வீட்டின் மண் சுவர் மழையால் ஊறி இருந்ததால் அதிகாலை, 2:30 மணியளவில் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி அசாருதீன் இறந்தான். காயமடைந்த சலீமை, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பேராவூரணி அருகே பூங்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி சிவபாக்கியம், 85. தன் மகன் மாடி வீட்டு அருகே, தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். மழையால், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில், சிவபாக்கியம் உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X