சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்னல் தாக்கி இருவர் பலி

Added : நவ 26, 2021
Share
Advertisement
பெரம்பலுார் : தமிழகத்தில் இரு வேறு இடங்களில் மின்னல் தாக்கி இருவர் பலியாயினர்.அரியலுார் மாவட்டம், வஞ்சனபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தியாகராஜன், 50. இவர், நேற்று மதியம், 2;00 மணியளவில், அங்குள்ள விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. தியாகராஜன் புளியமரத்துக்கு அடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது மின்னல்


பெரம்பலுார் : தமிழகத்தில் இரு வேறு இடங்களில் மின்னல் தாக்கி இருவர் பலியாயினர்.

அரியலுார் மாவட்டம், வஞ்சனபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தியாகராஜன், 50. இவர், நேற்று மதியம், 2;00 மணியளவில், அங்குள்ள விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. தியாகராஜன் புளியமரத்துக்கு அடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் தியாகராஜனும், இரண்டு ஆடுகளும் உயிரிழந்தன.

சிவகங்கை அருகே குமாரபட்டியை சேர்ந்த பாண்டியம்மாள், 50. இவர் நேற்று தோட்டத்தில் வேலை பார்த்தார். மதியம் 3:30 மணிக்கு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அவர் பலியானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X