ரூ.30க்கு தக்காளி விற்பனை கடலுாரில் குவிந்த கூட்டம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில், தக்காளியை கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்து, காய்கறி வியாபாரி பரபரப்பை ஏற்படுத்தினார்.தொடர் மழை மற்றும் உற்பத்தி குறைவால், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு காய்கறி வரத்து குறைந்தது. இதனால், ஒரு மாதமாக காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளியின் விலை உச்சம் தொட்டு, கிலோ 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. கடலுாரில் 100க்கு
 ரூ.30க்கு தக்காளி விற்பனை  கடலுாரில் குவிந்த கூட்டம்


கடலுார் : கடலுாரில், தக்காளியை கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்து, காய்கறி வியாபாரி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர் மழை மற்றும் உற்பத்தி குறைவால், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு காய்கறி வரத்து குறைந்தது. இதனால், ஒரு மாதமாக காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளியின் விலை உச்சம் தொட்டு, கிலோ 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. கடலுாரில் 100க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், கடலுார் முதுநகர் சாலக்கரை என்ற இடத்தில் காய்கறி கடை வைத்துள்ள ராஜேஷ் என்ற வியாபாரி, நேற்று 1 கிலோ தக்காளியை 30 ரூபாய்க்கு விற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த தகவல் காட்டுத்தீயாக பரவ, கடலுார் மற்றும் முதுநகர் பகுதிகளில் இருந்து அதிகளவில் மக்கள் திரண்டு வந்து, தக்காளியை வாங்கி சென்றனர். ஒருவருக்கு 1 கிலோ மட்டுமே வழங்கப்பட்டது. கூட்டம் அலைமோதியதால் போலீசார் வந்து ஒழுங்குபடுத்தினர்.

ராஜேஷ் கூறுகையில், ''கர்நாடகா மாநிலம், கோலாரில் இருந்து 1.5 டன் தக்காளி வந்தது. வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் 30க்கு விற்பனை செய்கிறேன்,'' என்றார்.

ஏற்கனவே கொரோனா பரவல் காலத்தில் 5 கிலோ காய்கறி தொகுப்பை 100க்கும், வெங்காயம் கிலோ 100க்கு மேல் விற்றபோது 10 ரூபாய்க்கும் ராஜேஷ் விற்பனை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X