கம்பீரை மிரட்டியது பாகிஸ்தான் மாணவர்| Dinamalar

கம்பீரை மிரட்டியது பாகிஸ்தான் மாணவர்

Added : நவ 26, 2021
Share
புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., - எம்.பி.,யுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, பாகிஸ்தானைச் சேர்ந்த பல்கலை மாணவர் என தெரியவந்துள்ளது.டில்லியில் வசிக்கும் கவுதம் கம்பீருக்கு, சமீபத்தில் 'இ - மெயில்' வந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ்., காஷ்மீர் என்ற முகவரியில் இருந்து வந்திருந்த அந்த மெயிலில், 'உன்னை கொல்லப் போகிறோம்' என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
Pakisthan,பாகிஸ்தான்


புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., - எம்.பி.,யுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, பாகிஸ்தானைச் சேர்ந்த பல்கலை மாணவர் என தெரியவந்துள்ளது.

டில்லியில் வசிக்கும் கவுதம் கம்பீருக்கு, சமீபத்தில் 'இ - மெயில்' வந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ்., காஷ்மீர் என்ற முகவரியில் இருந்து வந்திருந்த அந்த மெயிலில், 'உன்னை கொல்லப் போகிறோம்' என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அடுத்த நாளே மீண்டும் ஒரு இ - மெயில் வந்தது. அதில், 'நேற்று நீ தப்பி விட்டாய். காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவதை விட்டு, அரசியலில் இருந்தும் விலக வேண்டும். இல்லையென்றால் உன்னையும், குடும்பத்தையும் கொலை செய்து விடுவோம்' எனக் கூறப்பட்டு இருந்தது. மேலும் கவுதம் வீட்டுக்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோவும் அதில் இணைக்கப்பட்டு இருந்தது.

போலீஸ் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான், கராச்சி நகரில் இருந்து அந்த இ - மெயில் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள சிந்த் பல்கலை மாணவரான ஷகீத் ஹமீத், அந்த இ - மெயிலை அனுப்பியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. மத்திய புலனாய்வு குழுவுடன் இணைந்து, டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X