பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்க அறநிலையத்துறை முயற்சி

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
பொங்கலுார்: திருப்பூரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது.திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தில், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. சர்வே எண்:105ல் 2.47 ஏக்கர் உள்ளது. இந்த இடம் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்கு பட்டா
திருப்பூர், கோவில், நிலம், ஆக்கிரமிப்பு, அறநிலையத்துறை, முயற்சி

பொங்கலுார்: திருப்பூரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது.

திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தில், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. சர்வே எண்:105ல் 2.47 ஏக்கர் உள்ளது. இந்த இடம் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.அதனை வைத்து, அவர் பத்திரம் தயார் செய்து விற்று விட்டார். தற்போது அந்நிலத்தில், வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக நிலத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதயை மார்க்கெட் மதிப்பில், நிலம், 10 கோடி ரூபாய் மதிப்புடையது.

இகோவில் நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிலத்தை வீட்டு மனைகளாக பிரிக்கக்கூடாது; தனியார் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். கோவில் நிலத்தை கோவிலுக்கு தவிர வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என்று, பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


latest tamil news



இதுகுறித்து, ஹிந்து அறநிலைய துறை அலுவலர்கள் கூறுகையில், 'இந்த நிலம், கடந்த 1912ல் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. 1968ல், இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்குப் பட்டா வழங்கப்பட்டது. தற்போதை நிலத்தை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
26-நவ-202119:30:56 IST Report Abuse
S. Narayanan நம்ம ஆளு அற நிலைய துறை அமைச்சர் சேகர் பாபு மாற்று ஸ்டாலின் இருவரும் எல்லா ஆக்ரமிப்பு நிலங்களையும் மீட்டு விட்டோம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆக ஆட்சியாளர்கள் சொல்வது எல்லாம் பொய். மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
26-நவ-202113:37:44 IST Report Abuse
jayvee சட்டம் செய்வதும் சட்டம் ஒழிப்பதும் அரசியல்வாதிகளின் நலனுக்காக மட்டுமே.. மக்களுக்காக அல்ல.. குறிப்பாக தமிழகத்தில் ஹிந்துக்களுக்காகவோ அல்லது ஹிந்து கோவில்களை கப்பருவதற்க்காகவோ அல்ல என்பது கடந்த எழுபது ஆண்டு திராவிட ஆட்சிகளில் நாம் கண்ட உண்மை
Rate this:
26-நவ-202119:51:34 IST Report Abuse
E Mariappanதிராவிட ஆட்சி வந்து 54 ஆண்டு ஆகிறது. பொய்க்கு பிறந்தவன்...
Rate this:
Cancel
26-நவ-202112:43:06 IST Report Abuse
Narayana Rao வெளீச்சேரி - இல் உள்ள பல இடங்கள் தண்டீஸ்வரன் கோவிலுக்கு உரியது. தாண்டீஸ்வரன் காலனி என்ற பெயரும் உண்டு. பாதி சிவன் கோவில் உரியது மீதி எரியை அக்ரமித்து கட்டப்பட்டவை. இதை எல்லாம் கேட்பார் யாரும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X