முதல்வராக, தந்தையாக பெண் குழந்தைகளை காக்கும் பொறுப்பு இருக்கிறது; முதல்வர் ஸ்டாலின்

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (50)
Advertisement
சென்னை: பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும், ஒரு முதல்வராக மட்டுமில்லாமல் தந்தையாகவும் இருந்து பெண் குழந்தைகளை காக்கும் பொறுப்பு இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டு வருகிறது. பெண்கள்,
TamilnaduCM, Stalin, Sexual Harassment, Women, Children, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், பாலியல் துன்புறுத்தல், தற்கொலை

சென்னை: பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும், ஒரு முதல்வராக மட்டுமில்லாமல் தந்தையாகவும் இருந்து பெண் குழந்தைகளை காக்கும் பொறுப்பு இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தி ஒன்று என்னை அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டு வருகிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது அவமானமாக இருக்கிறது. அறத்தையும் பண்பாட்டையும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில் அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்த காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட கேவலமான, அருவருப்பான செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது.


தற்கொலை தீர்வல்ல சொல்கிறார் ஸ்டாலின் | Stalin | Sucide for sexual harrassment | Dinamalar News

latest tamil newsஇவற்றைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது! விட்றாதீங்கப்பா என்று அந்தக் குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது. பள்ளிகளில் கல்லூரிகளில் -பணிபுரியும் இடங்களில் பொது வெளிகளில் பெண்களும், குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அதில் சில சம்பவங்கள்தான் வெளியில் வருகிறது. மற்றவை அப்படியே மறைக்கப்படுகிறது. சக உயிராக பெண்ணைப் பார்க்கும் எண்ணம் தோன்றாத வரை இதனைத் தடுக்க முடியாது. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தைகள் அதைப்பற்றி வெளிப்படையாகப் புகார் தருவதற்கு முன் வர வேண்டும்.


latest tamil news


அன்புக் குழந்தைகளே… உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு முதல்வராக மட்டுமில்லாமல் ஒரு தந்தையாகவும் இருந்து உங்களைக் காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. தயவு செய்து யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்ந்துதான் போராட வேண்டும். வாழ்ந்து காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். எனவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஒரு தந்தையாக உங்கள் சகோதரனாக உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
30-நவ-202104:04:58 IST Report Abuse
meenakshisundaram தந்தை?-இப்படித்தான்யா தமிழக மக்களை டபாய்க்கணும்.ஒரு காலத்திலே தின தந்தி ஆதித்தனை 'தமிழர் தந்தை'ன்னு சொன்னாங்க .அப்புறம் ராமசாமி நாயகனை தந்தை பெரியார் ன்னு சொன்னாங்க .இப்போ ஸ்டாலின் ?
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
26-நவ-202122:05:09 IST Report Abuse
R. Vidya Sagar நீட் விஷயமாக தற்கொலை செய்து கொண்டால் விஷயம் வேறே.
Rate this:
Cancel
26-நவ-202121:01:29 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் வெட்கமா இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X