பொது செய்தி

தமிழ்நாடு

திருநெல்வேலியில் விடிய விடிய கனமழை; குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்; வீடு சுவர் இடிந்து குழந்தை பலி

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலியில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்தது. களக்காடு அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 வயது பெண் குழந்தை பலியானது.திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் கடனா அணையிலிருந்து உபரி
திருநெல்வேலி, கனமழை, வெள்ளம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்தது. களக்காடு அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து 3 வயது பெண் குழந்தை பலியானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் கடனா அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் 8 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று (நவ.,25) பிற்பகல் முதல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இரவும் மழை தொடர்ந்ததால், நீர் பிடிப்புகளில் நீர்வரத்து அதிகரித்தது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


திருநெல்வேலி மாநகர பகுதியில் 10.7 செ.மீ., மணிமுத்தாறில் 9.46 செ.மீ., சேரன்மகாதேவியில் 8.4 செ.மீ., பாபநாசத்தில் 8.1 செ.மீ., நம்பியாறு பகுதியில் 8 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 7.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று இரவில் திருநெல்வேலியை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டனர். களக்காடு கீழபத்தையில் மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
26-நவ-202116:29:55 IST Report Abuse
raja விடியலை பாரீர்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X