பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீரில் ததும்புது தமிழகம்: இயல்பைவிட 70% கூடுதல் மழைப்பொழிவு

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 70 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட
மழை, மாவட்டங்கள், சென்னை, சென்னை வானிலை மையம்,

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 70 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


latest tamil news




இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று(நவ.,26) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news




நாளை(நவ.,27) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யலாம்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கம்.


latest tamil news




மீனவர்களுக்கான எச்சரிக்கை
நவ.,26, 27: குமரிக்கடல் , தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.

வரும் 29 ம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், நவ.,29 மற்றும் 30 தேதிகளில், அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடை இடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தென் மண்டல ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 4 இடங்களில் கன முதல் மிக கனமழையும், 70 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு, பாதிப்பு மற்றும் சேதம் அடிப்படையில் அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும், அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும் விடப்படுகிறது.


latest tamil news




வடகிழக்கு பருவமழை துவங்கிய பின்னர் கடந்த அக்.,1 முதல் இன்று(நவ.,26) வரை தமிழகத்தில் பதிவான மழை அளவு: 58 செ.மீ.,

இயல்பாக பதிவாகும் மழை அளவு:34 செ.மீ.,
தற்போது 70 சதவீதம் மழை கூடுதலாக பதிவாகி உள்ளது. சென்னையில் 67 சதவீதம் அதிக மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
26-நவ-202122:58:45 IST Report Abuse
BASKAR TETCHANA இதெல்லாம் சர்வ சாதாரணம் இந்த ஆட்சியில். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைக்கு என்ற பெயரை தண்ணீர் கடைகளை திறந்து சாகடிக்கிறார்கள். வருண பகவான் அவன் பங்குக்கு தண்ணீர் திறக்கிறான் அவ்வளவு தான் வித்தியாசம்.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
26-நவ-202120:28:54 IST Report Abuse
Visu Iyer செயற்கை மழையை யாரோ பெய்ய வைக்கிறார்கள் என்று சொல்ல போறாங்க.. தர்மகோல் விங்ஞானிகள்..
Rate this:
Cancel
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
26-நவ-202120:18:51 IST Report Abuse
Bismi 70% அதிக மழை கடலில் கலந்து வீண். தேக்கி வைக்க இடமில்லாமல் ஏரிகளில் வீடு. சென்னை மக்கள் வெள்ளம் வெள்ளம் என்று புலம்புவது கேட்டால் எரிச்சல்தான் வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X