பொது செய்தி

தமிழ்நாடு

'நீங்க சொன்னா நாங்க கேட்கணுமா?' பட்டால்தான் எங்களுக்கு புத்தி வரும்

Added : நவ 26, 2021
Share
Advertisement
அந்தியூர்: நிரம்பி தளும்பும் அந்தியூர் பெரிய ஏரியில், அச்சத்தை மறந்து, எச்சரிக்கையை துறந்து, துணி துவைப்பதும், செல்பி எடுப்பதும் அதிகரித்துள்ளது.தொடர் மழையால், ?? ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தியூர் பெரிய ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஏரியை பார்க்க அந்தியூர் சுற்று வட்டார பகுதி மக்கள் செல்வது அதிகரித்துள்ளது. ஏரி தடுப்பு சுவர் மீது நின்று, பலர் செல்பி

அந்தியூர்: நிரம்பி தளும்பும் அந்தியூர் பெரிய ஏரியில், அச்சத்தை மறந்து, எச்சரிக்கையை துறந்து, துணி துவைப்பதும், செல்பி எடுப்பதும் அதிகரித்துள்ளது.


தொடர் மழையால், ?? ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தியூர் பெரிய ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் ஏரியை பார்க்க அந்தியூர் சுற்று வட்டார பகுதி மக்கள் செல்வது அதிகரித்துள்ளது. ஏரி தடுப்பு சுவர் மீது நின்று, பலர் செல்பி எடுக்கின்றனர். தவறி விழுந்தால் ஏரிக்குள் விழ வேண்டியதுதான். நீச்சல் தெரியாவிட்டால் உயிரிழக்க நேரிடும். இதனால் வருவாய்த்துறை சார்பில் அபாய அறிவிப்பு விடுத்த நிலையில், அப்பகுதியில் எச்சரிக்கை பேனரும் வைக்கப்பட்டுள்ளது. இதை படித்து விட்டே பலர் ஏரி மீது ஏறி ரசிக்கின்றனர். சிலர் துணிச்சலுடன் துணி துவைக்க, பலர் செல்பி எடுத்து ரசித்தும் செல்கின்றனர். எச்சரித்தும் கேட்காதவர்களை யார் தான் என்ன செய்ய முடியும்? வரும் முன் காப்பதுதான் அறிவு; வந்த பின் புலம்புவது அறிவீனம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X