சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலைச்சரிவில் சறுக்கி விழுந்த ஆண் யானை உயிரிழப்பு

Added : நவ 26, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட சத்தியமங்கலம் வனச்சரகம் குத்தியாலத்தூர் காப்புக்காடு, ராமர் போலி வனப்பகுதியில் வனப்பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. சத்தியமங்கலம் ரேஞ்சர் பெர்னாட் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். வனத்துறை அதிகாரிகள்

புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட சத்தியமங்கலம் வனச்சரகம் குத்தியாலத்தூர் காப்புக்காடு, ராமர் போலி வனப்பகுதியில் வனப்பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. சத்தியமங்கலம் ரேஞ்சர் பெர்னாட் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், யானையின் உடலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் அசோகன் பிரேதபரிசோதனை செய்தார். மருத்துவ அலுவலரின் அறிவுரைப்படி, யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாக வனப்பகுதியிலேயே விடப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'இறந்து கிடந்தது 25 வயதுள்ள ஆண் யானை. வனப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக மலைச்சரிவில் இருந்து சறுக்கி விழுந்துள்ளது. இதில் தந்தங்கள் அடிபட்டு உடைந்த நிலையில் யானை இறந்தது தடயங்கள் மூலம் தெரிய வந்தது. யானையின் உடலில் இருந்து இரண்டு தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X