பொது செய்தி

தமிழ்நாடு

சிலிண்டர் விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணத்தொகை

Added : நவ 26, 2021
Share
Advertisement
சேலம்: சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. சேலம், தாதகாப்பட்டி பாண்டுரங்கன் விட்டல் தெருவில், கடந்த, 23ல், காஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. அதில், 5 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். முதல்வர் ஸ்டாலின், இறந்தோரின் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய்

சேலம்: சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. சேலம், தாதகாப்பட்டி பாண்டுரங்கன் விட்டல் தெருவில், கடந்த, 23ல், காஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. அதில், 5 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். முதல்வர் ஸ்டாலின், இறந்தோரின் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை அறிவித்தார். அதன்படி, இறந்தவர்களான பத்மநாபன், தேவி, கார்த்திக்ராம், எல்லம்மாள், ராஜலட்சுமி ஆகியோரின் குடும்பத்தினரிடம், நேற்று, தலா, 5 லட்சம் ரூபாய் காசோலையை, கலெக்டர் கார்மேகம் வழங்கினார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, 13 பேருக்கும் நிவாரணத்தொகை காசோலையாக வழங்கப்பட்டது. எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X