பொது செய்தி

தமிழ்நாடு

சாய தொழிற்சாலைக்கு மக்கள் எதிர்ப்பு; ஆர்.டி.ஓ.,வை முற்றுகையிட்ட மக்கள்

Added : நவ 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மகுடஞ்சாவடி: சாய தொழிற்சாலை செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.டி.ஓ.,வை முற்றுகையிட்டனர்.மகுடஞ்சாவடி, காளிகவுண்டம்பாளையம் ஊராட்சி, செட்டியூரில், 2 ஏக்கரில் தனியார் சாய தொழிற்சாலை கட்டுமானப்பணி, 2012ல் தொடங்கி, 2017ல் முடிந்தது. மக்கள் எதிர்ப்பால், அதன் இயக்கம் தள்ளிவைக்கப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, தொழிற்சாலைக்கு மின்கம்பம் அமைக்க, மின்வாரிய துறையினர்,

மகுடஞ்சாவடி: சாய தொழிற்சாலை செயல்பட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.டி.ஓ.,வை முற்றுகையிட்டனர்.


மகுடஞ்சாவடி, காளிகவுண்டம்பாளையம் ஊராட்சி, செட்டியூரில், 2 ஏக்கரில் தனியார் சாய தொழிற்சாலை கட்டுமானப்பணி, 2012ல் தொடங்கி, 2017ல் முடிந்தது. மக்கள் எதிர்ப்பால், அதன் இயக்கம் தள்ளிவைக்கப்பட்டது. நேற்று காலை, 9:00 மணிக்கு, தொழிற்சாலைக்கு மின்கம்பம் அமைக்க, மின்வாரிய துறையினர், 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். இதையறிந்த சுற்றுப்பகுதி மக்கள், மின்வாரிய துறையினரை தடுத்தனர். தொடர்ந்து வந்த சங்ககிரி ஆர்.டி.ஓ., வேடியப்பன் வாகனத்தை முற்றுகையிட்டனர். மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் போலீசார் பேச்சு நடத்திய போது, '15 நாள் அவகாசம் வேண்டும். பின் மின் இணைப்பு கொடுங்கள்' என, மக்கள் கோரினர். அதிகாரிகள் ஏற்க, மக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: ஆர்.டி.ஓ., தலைமையில் நான்குமுறை அமைதி பேச்சு நடந்தும் தீர்வில்லை. கழிவுநீரை பூமிக்குள் செலுத்த, 3 ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை செயல்பட்டால், 7 கி.மீ., தூரம் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, மக்களுக்கு பல்வேறு நோய் ஏற்படும். சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால், ஆலை இயங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கும். ஆலை அருகே, 500 மீ., தூரத்தில் பள்ளி உள்ளது. அதனால், ஆலை செயல்பட கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். சங்ககிரி டி.எஸ்.பி., நல்லசிவம் கூறுகையில், ''பிரச்னை முடியும் வரை மின்கம்பம் அமைக்க கூடாது என உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
27-நவ-202114:02:31 IST Report Abuse
SENTHIL NATHAN திருப்பூர் ஈரோடு எல்லாம் கேட்டு போச்சு . கழிவு நீரை பூமிக்குள் விடலாமா?? மாசு கட்டுப்பாடு வாரியம்னு ஒன்னு இருக்கா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X