பொது செய்தி

தமிழ்நாடு

கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலுக்கு தங்க தேர்: அறநிலையத்துறையிடம் ஒப்படைத்த அறக்கட்டளை

Added : நவ 26, 2021
Share
Advertisement
இடைப்பாடி: கல்வடங்கம் அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை மூலம் செய்யப்பட்ட தங்க தேர், செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.சேலம் மாவட்டம், இடைப்பாடி, கல்வடங்கம், அங்காளம்மன் கோவிலில், மாசியில் தேரோட்டம் நடக்கும். அதனால், கல்வடங்கம் அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை மூலம், தங்கத்தேர் அமைக்கும் பணி, 2015 ஆக., 16ல் தொடங்கியது. தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் குழுவினர்

இடைப்பாடி: கல்வடங்கம் அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை மூலம் செய்யப்பட்ட தங்க தேர், செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.


சேலம் மாவட்டம், இடைப்பாடி, கல்வடங்கம், அங்காளம்மன் கோவிலில், மாசியில் தேரோட்டம் நடக்கும். அதனால், கல்வடங்கம் அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை மூலம், தங்கத்தேர் அமைக்கும் பணி, 2015 ஆக., 16ல் தொடங்கியது. தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் குழுவினர் ஈடுபட்டனர். கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த அப்பணி, கடந்த ஆண்டு முடிந்தது. முதலில், தேரில் செம்பாலான தகடு செய்யப்பட்டு, பின், 5 அடுக்கு தங்கத்தகடு ஒட்டப்பட்டது. 6 கிலோ தங்கத்தால் தேர் செய்யப்பட்டது. முழுமை அடைந்த தங்க தேரை, கோவில் செயல் அலுவலர் கோகிலா, பரம்பரை அறங்காவலர் மகிபாலனிடம், நேற்று அறக்கட்டளை தலைவர் மோகனசுந்தரம், செயலர் முத்துசாமி, பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் ஒப்படைத்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்புதலோடு, மார்ச்சில் தேரோட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறக்கட்டளை மூலம் தங்கம், நிதியுதவி பெற்று தங்க தேர் செய்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாக, அதன் நிர்வாகிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X