வேளாண் கூட்டுறவு சங்க உதவி செயலர் சஸ்பெண்ட்| Dinamalar

வேளாண் கூட்டுறவு சங்க உதவி செயலர் 'சஸ்பெண்ட்'

Added : நவ 26, 2021 | |
ஆத்தூர்: பயிர் கடன் வழங்கிய விவகாரத்தில், கூட்டுறவு சங்க உதவி செயலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். ஆத்தூர், கீரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அத்துடன், அதன் உதவி செயலர் சக்திவேல், 55, பயிர் கடனுக்கு முறைகேடாக பணம் பெற்றதாக, கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம், விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அவர்

ஆத்தூர்: பயிர் கடன் வழங்கிய விவகாரத்தில், கூட்டுறவு சங்க உதவி செயலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். ஆத்தூர், கீரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அத்துடன், அதன் உதவி செயலர் சக்திவேல், 55, பயிர் கடனுக்கு முறைகேடாக பணம் பெற்றதாக, கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம், விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க, நிர்வாக குழுவுக்கு, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தினர். இதனால், சக்திவேலை 'சஸ்பெண்ட்' செய்து, கூட்டுறவு சங்கத்தலைவர் பொன்னம்மாள் உத்தரவிட்டார். தொடர்ந்து, அவர் மீது பல்வேறு புகார் உள்ளதால், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X