‛‛பென்சிலை திருடிட்டான் சார்.. கேஸ் போடுங்க''; போலீசில் புகார் அளித்த 1ம் வகுப்பு மாணவன்

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
கர்னூல்: ஆந்திராவில் 1ம் வகுப்பு மாணவன், சக மாணவன் பென்சிலை திருடிவிட்டதாக கூறி போலீசாரிடம் புகாரளித்து அவன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு முறையிட்ட நிகழ்வு வைரலாகியுள்ளது.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூரை சேர்ந்த சிறுவன் ஹனுமந்த். அதே ஊரில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று (நவ.,25) அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சில மாணவர்களுடன்
Kid Asks Police, Book Complain, Stealing Pencil, Classmate, Andhra Pradesh, Kurnool, மாணவன், சிறுவன், வழக்குப்பதிவு, பென்சில் திருட்டு, போலீஸ், ஆந்திரா

கர்னூல்: ஆந்திராவில் 1ம் வகுப்பு மாணவன், சக மாணவன் பென்சிலை திருடிவிட்டதாக கூறி போலீசாரிடம் புகாரளித்து அவன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு முறையிட்ட நிகழ்வு வைரலாகியுள்ளது.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தகடுவூரை சேர்ந்த சிறுவன் ஹனுமந்த். அதே ஊரில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று (நவ.,25) அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சில மாணவர்களுடன் வந்த ஹனுமந்த், அதில் ஒரு மாணவன் மீது பென்சிலை திருடி விட்டான் என புகார் கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த போலீசார், புகாரளித்த மாணவனை சமாதானம் செய்துவைத்து இருவரையும் கைகுலுக்க சொல்கிறார்.latest tamil news

கைகுலுக்கியும் சமாதானம் ஆகாத ஹனுமந்த், 'என்னுடைய பென்சிலை திருடியவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' எனப் பிடிவாதமாக போலீசாரிடம் கூறினான். அதற்கு வழக்குப்பதிவு செய்தால் நீதிமன்றம், ஜாமின் என பென்சில் திருடிய மாணவனின் பெற்றோர் அலைய நேரிடும் எனப் போலீசார் கூறுகின்றனர். இதனையடுத்து, நான் அவனுடைய பெற்றோரிடம் இது பற்றி கூறுகிறேன் என ஹனுமந்த் தெரிவித்தான். சிரிப்பை அடக்க முடியாத போலீசார் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 1ம் வகுப்பு மாணவனின் இந்த செயல் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (30)

பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
27-நவ-202112:15:29 IST Report Abuse
பெரிய ராசு தங்கத்தலைவனை நினைவு படுத்துகிறான் திருட்டு சிறுவன் ...
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
27-நவ-202112:05:34 IST Report Abuse
INDIAN Kumar பெற்றோரை பாராட்டுகிரெய்ன் , எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே , அவன் நல்லவன் ஆவதுவும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே
Rate this:
Cancel
27-நவ-202103:57:20 IST Report Abuse
SUBBU, MADURAI பிஞ்சுல பழுப்பதெல்லாம் வெம்பி போகும் என்பதற்கு இந்த பொடி பயபுள்ளதான் உதாரணம்.இதெல்லாம் எங்க உருப்பட போகுது?வளர்ப்பு சரியில்லைன்னா இப்படித்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X