உயிரை பணயம் வைத்து ஆற்றை கடக்கும் மாணவர்கள்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: தரைப்பாலம் இல்லாததால், மாணவ, மாணவியர் தினமும் உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்து செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் இனாம் குட்டப்பள்ளி கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த வாரம் பெய்த மழையால் மார்க்கண்டேய நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிராமத்திற்கு அமைத்திருந்த தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

கிருஷ்ணகிரி: தரைப்பாலம் இல்லாததால், மாணவ, மாணவியர் தினமும் உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்து செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் இனாம் குட்டப்பள்ளி கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த வாரம் பெய்த மழையால் மார்க்கண்டேய நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிராமத்திற்கு அமைத்திருந்த தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராமத்திற்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டதால், கடந்த ஒரு வாரமாக மாணவ, மாணவியர், கிராம மக்கள் பாய்ந்தோடும் நீரில் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர். தண்ணீர் அதிகமானால் சில நேரங்களில் கரையை கடக்க முடியாமல், காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தரைப்பாலம் அமைக்காததால், ஒவ்வொரு முறையும் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில், ஆற்றை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கிராமத்தில் இருந்து வேப்பனஹள்ளி பிரதான சாலைக்கு, 1 கி.மீ., தொலைவு உள்ளதால், இதுவரை கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. எனவே விபத்து ஏற்படும் முன் தரைப்பாலம், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X