பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினர் விருப்ப மனு அளிக்க அழைப்பு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகள் மற்றும் ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் பேரூராட்சி வார்டுகளுக்கு போட்டியிட விரும்புவோர் இன்று (26) முதல் வரும், 28 வரை கிருஷ்ணகிரி மாவட்ட கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகள் மற்றும் ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம் பேரூராட்சி வார்டுகளுக்கு போட்டியிட விரும்புவோர் இன்று (26) முதல் வரும், 28 வரை கிருஷ்ணகிரி மாவட்ட கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். நகராட்சி வார்டு உறுப்பினருக்கு, 2,500 ரூபாய், பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு, 1,500 ரூபாய் விருப்பமனுவுடன் இணைத்து வழங்க வேண்டும். ஏற்கனவே வாய்ப்பு கோரி மனு அளித்துள்ளவர்கள், அதற்கான ரசீதை சமர்பித்து மனுவை பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேபோல் ஓசூர் மாநகராட்சி, பர்கூர், நாகோஜனஹள்ளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்புவர்கள், ஓசூரிலுள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.முக., அலுவலகத்தில் விருப்பமனு அளிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X