பொது செய்தி

தமிழ்நாடு

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 15 நாளாக தேங்கும் தண்ணீர்

Added : நவ 26, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில், 15 நாளாக தண்ணீர் தேங்கி இருப்பதால் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.வேலூரில் பெய்து வரும் தொடர் மழைக்கு, கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில், 15 நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் ஊழியர்கள் திணறுகின்றனர். முழங்கால் அளவு நீரில் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நேற்று கோவிலை

வேலூர்: வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில், 15 நாளாக தண்ணீர் தேங்கி இருப்பதால் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.


வேலூரில் பெய்து வரும் தொடர் மழைக்கு, கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில், 15 நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் ஊழியர்கள் திணறுகின்றனர். முழங்கால் அளவு நீரில் பக்தர்கள் நடந்து செல்கின்றனர். மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நேற்று கோவிலை பார்வையிட்டு அதிகப்படியான நீரை மோட்டார் வைத்து வெளியேற்ற உத்தரவிட்டார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோவிலில் உள்ள மூலவருக்கு அடியில் குளம் உள்ளது. ஜலத்தில் நிற்பதால் ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் உள்ளது. குளத்தில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக, கோட்டையை சுற்றிலும் அகழி அமைத்து, குளத்திற்கு தண்ணீர் செல்லும் வசதி கோவில் கட்டும் போதே செய்து விட்டனர். குளத்தில் அதிகளவு தண்ணீர் சேர்ந்து கோவில் மூழ்காமலிருக்க, உபரி நீர் அகழி குளத்திலிருந்து சேண்பாக்கம் பாலாற்றுக்கு வெளியேற்றும் வசதியும் பூமிக்கடியில் அப்போதே செய்து விட்டனர். தற்போது கோவில் குளத்திலிருந்து, பாலாற்றுக்கு செல்லும் வழி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அகழியில் சிறிது தண்ணீர் மட்டம் உயர்ந்தாலும் கோவிலுக்குள் சென்று விடுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாலாற்றுக்கு செல்லும் வழியை கண்டுபிடிப்பது தான் நிரந்திர தீர்வாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X