கர்நாடகாவில் ஒரே மருத்துவக்கல்லூரியில் 182 பேருக்கு கோவிட்

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில், 182 மாணவர்கள், பேராசிரியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் தர்வாத் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.டி.எம் மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பர் 17ம் தேதி புதிதாக கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அக்கல்லூரியின் மாணவர்கள்,
Karnataka, Medical College, Super Spreader, Covid Cases, Rise, 182, கர்நாடகா, மருத்துவக் கல்லூரி, கோவிட், கொரோனா, பாதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில், 182 மாணவர்கள், பேராசிரியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தர்வாத் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.டி.எம் மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பர் 17ம் தேதி புதிதாக கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அக்கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் என சுமார் 3,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இக்கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனையடுத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.


latest tamil news


அதன்படி, முதலில் 300 பேரை பரிசோதனையிட்டதில் 66 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை முடிவுகள் வெளிவந்திருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டவர்கள் எனவும், அவர்களில் பலருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. அனைவரும் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-நவ-202108:34:44 IST Report Abuse
ஆரூர் ரங் இரண்டு தடுப்பூசிகளும் போட்டிருந்தால் கூட தொடர்ந்து நோயாளிகளுடன் போராடுவதால் மருத்துவர்களும் வைரஸ் தொற்று ஆபத்து எப்போதுமே அதிகம்தான் .🙄 இருந்தாலும் இறப்பு ஆபத்து மிகக் குறைவு
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
26-நவ-202121:00:35 IST Report Abuse
Mirthika Sathiamoorthi இவர்களெல்லாம் நீட் தேர்வெழுதி தகுதி பெற்ற மருத்துவர்கள்...டாஸ்மாக் டுமிழன்மாதிரி நீட் தேர்வுக்கு பயந்தவனுக கிடையாது..பாருங்க தமிழ்நாட்டில் இந்தமாதிரி மருத்துவக்கல்லூரியில் நடக்கும்? தகுதி இல்லா பயலுங்க துமிலன்ஸ் ..இதுக்குதான் நீட் அவசியம்ன்னு தலையால அடிச்சுகிறோம்.
Rate this:
Cancel
26-நவ-202120:45:04 IST Report Abuse
அப்புசாமி தடுப்பூசின்னு என்னத்தப் போட்டாங்களோ? 100 கோடி, 110 கோடி தடுப்பூசின்னு மெடல் குத்திக்கிறாங்கோ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X