முல்லை பெரியாறு அணையில் மரம் வெட்ட அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையில் மரங்களை வெட்ட அனுமதி வழங்கிவிட்டு அதனை கேரள அரசு திரும்பப் பெற்ற விவகாரத்தில் மரங்களை வெட்ட அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முல்லை பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைக்காக 15 மரங்களை வெட்ட கேரளாவிடம் தமிழக அரசு அனுமதி
MullaPeriyar, Trees, Tamilnadu Govt, Supreme Court, Kerala Govt, முல்லை பெரியாறு, மரம் வெட்ட அனுமதி, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், கேரள அரசு

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையில் மரங்களை வெட்ட அனுமதி வழங்கிவிட்டு அதனை கேரள அரசு திரும்பப் பெற்ற விவகாரத்தில் மரங்களை வெட்ட அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைக்காக 15 மரங்களை வெட்ட கேரளாவிடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. இதற்கு 15 மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி அளித்து கேரளா தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், தங்களை கேட்காமலேயே வனத்துறை அதிகாரிகள் தமிழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறியிருந்தார்.


latest tamil news


இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதனையடுத்து தமிழகத்துக்கு மரம் வெட்ட கொடுத்த அனுமதியை ரத்து செய்வதாக கேரள அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் தமிழகத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், மரங்களை வெட்ட அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
27-நவ-202100:03:39 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam திமுகவின் முகமும் இடதுசாரிகளின் முகமும் ஒன்றே.
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
26-நவ-202121:38:54 IST Report Abuse
KavikumarRam டீயமுக தமிழகத்தின் உண்டியல் கட்சிக்கு குடுத்தா இருவத்தஞ்சு கோடி ஓவாவ திருமப வாங்குமா இல்ல ஆர்எஸ்பி மீடியா அதுக்கும் முட்டு கொடுக்குமா. இந்த பொழப்புக்கு...
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
26-நவ-202121:37:22 IST Report Abuse
KavikumarRam அப்போ தேங்ஸ் சொன்னது எல்லாம் டூப்பா. எரநூறு ஓவா மீடியா முன்களப்ஸ் முன்னே வரவையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X