பொது செய்தி

இந்தியா

டிச.,15ல் சர்வதேச விமான போக்குவரத்து துவக்கம்: மத்திய அரசு

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : கோவிட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து வரும் டிச.,15 முதல் துவங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கோவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ல் சர்வதேச விமானபோக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக பல கட்டுப்பாடுகளுடன் 28
India,resume,international flights,Aviation Ministry,


புதுடில்லி : கோவிட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து வரும் டிச.,15 முதல் துவங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23ல் சர்வதேச விமானபோக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக பல கட்டுப்பாடுகளுடன் 28 நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.


latest tamil newsஇந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வணிக ரீதியிலான சர்வதேச விமான போக்குவரத்தை , இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் துவக்குவது குறித்து, மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களுடன் ஆலோசனை நட்தப்பட்டது. இதில் எடுத்த முடிவுகளின்படி, வரும் டிச.,15 முதல் சர்வதேச விமான போக்குவரத்தை துவக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-நவ-202103:20:32 IST Report Abuse
மலரின் மகள் ஏர் இந்தியாவின் விற்பனை முழுவதுமாக அதிகாரப்பூர்வாமாக அதற்கு ஒரு சில தினங்களுக்குல் இருக்கும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. ஏர் இந்திய விமானத்தை விற்கும் வரையில் சர்வதேச விமான போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை என்றும் இப்போது அந்த தடை நீங்கி விட்டது என்று ஜோவியலாக சொல்கிறார்கள் நட்பு வட்டார கதைப்பில்.
Rate this:
Cancel
26-நவ-202120:41:48 IST Report Abuse
அப்புசாமி அதுக்குள்ள மூனாவது அலை வராம இருக்கணும்.
Rate this:
Cancel
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
26-நவ-202119:14:32 IST Report Abuse
Siva Subramaniam Need of the hour, and good for the economy. Hope the resuming of international flights will stabilize the air travel needs as before March 2020.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X