மார்ச் முதல் மஹா.,வில் பா.ஜ., ஆட்சி: மத்திய அமைச்சர் நம்பிக்கை

Added : நவ 26, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: 'வரும் மாதத்தில் மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும்,' என மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியிருப்பது அம்மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி கடந்த 2019 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ., 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு
BJP Government, Maharashtra, By March, Union Minister, Narayan Rane, மஹாராஷ்டிரா, பாஜக, பாஜ, ஆட்சி, மார்ச், மத்திய அமைச்சர், நாராயண் ரானே

புதுடில்லி: 'வரும் மாதத்தில் மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும்,' என மத்திய அமைச்சர் நாராயண் ரானே கூறியிருப்பது அம்மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி கடந்த 2019 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ., 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி கேட்டு சிவசேனா போர்க்கொடி தூக்கியது. இதற்கு பா.ஜ., மறுப்பு தெரிவிக்கவே, கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைத்தது.


latest tamil news


ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, இந்த கூட்டாட்சி நிலைக்காது என பலரும் கருத்து தெரிவித்த நிலையில், உத்தவ் தாக்கரே கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளார். இந்நிலையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ள கருத்து மீண்டும் மஹா.,வில் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'மஹாராஷ்டிராவில் மார்ச் மாதத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கும். மாற்றத்தை பார்ப்பீர்கள்,' எனக் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
26-நவ-202123:45:40 IST Report Abuse
PRAKASH.P ஜோசியம் பார்ப்பவர்கள் அரசியல் வந்தால் இப்படி
Rate this:
Cancel
26-நவ-202121:55:45 IST Report Abuse
பாமரன் ஒருவேளை தாக்கரே கிட்ட போய்.. அலோ எச்சூச்மி நீங்க ஆசைப்பட்ட மாதிரியே ரெண்டரை வருஷம் இருந்தாச்சுன்னா எங்களை விடுங்க பிளீஜ் அப்பிடின்னு கேட்பாரோ..🤔🤔 இல்லைன்னா நம்ம நவீன இரும்பு மனிதர்ஜி சமஉ ஷாப்பிங் செஞ்சு ரொம்ப நாளாச்சு.. நிச்சயமா செய்வார்ன்னு நம்பிக்கையா இருக்காப்லையோ...🙄🙄
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
26-நவ-202119:59:01 IST Report Abuse
J. G. Muthuraj ஒரு மாநில ஆட்சியை கவிழ்ப்பதிலும், அதிகாரத்தை கைப்பற்றுவதுமான சூழ்ச்சி திட்டத்திலேயே பிஜேபியின் பணமும், எனர்ஜியும் வீணடிக்கப்படுகிறது......பாருங்கள், மாற்றத்தை மாதம் குறிப்பிட்டு பேசுகிறார் நிர்வாக பொறுப்பிலுள்ள ஒரு மத்திய அமைச்சர்......அமைச்சர்களில் பலர் காட்சிப்பணியில் தான் ஆர்வம், ஈடுபாடு காட்டுகின்றனர்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X