பொது செய்தி

இந்தியா

அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் : மோடி

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார். அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகளை வழங்கி உள்ள நாடாக திகழ்கிறோம். சமூகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.பல பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் நாட்டை

புதுடில்லி:அரசியல் சாசனப்படி குடிமக்களின் உரிமைகளை காக்கவேண்டும் என அரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.latest tamil newsஅரசியல் சாசன நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகளை வழங்கி உள்ள நாடாக திகழ்கிறோம். சமூகத்தில் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.பல பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசிலமைப்பு உதவியது.

சுதந்திரத்திற்கு பிறகும் பல ஆண்டுகாலமாக ஒரு பெரிய பகுதி மக்களின் வீடுகளில் கழிவறைகள், மின்சாரம் தண்ணீர் வசதிகள் கூட இல்லாத கோடிக்கணக்கான மக்கள் தவித்து வந்தனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்தியா சுதந்திரம் பெற்ற அதே காலகட்டத்தில் சுதந்திரம் பெற்ற மற்ற நாடுகள் நம்மை காட்டிலும் முன்னேறி உள்ளன. நாம் இன்னும் இலக்கை அடைய வேண்டும்.

பல நூறு ஆண்டுகள் இந்தியா வறுமை, பட்டினி,மற்றும் நோய்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுவந்துள்ளது. அந்த நிலையில் இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல் சாசன அமைப்பு எங்களுக்கு உதவி உள்ளது.அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு வாழ்க்கையை எளிதாக்குவது - அரசியலமைப்பின் உண்மையான மரியாதை என்று நான் கருதுகிறேன்.


latest tamil newsசுதந்திரத்திற்காக வாழ்ந்து மறைந்த மக்கள் கண்ட கனவுகளின் வெளிச்சத்திலும்,பழமையான இந்தியாவின் பாரம்பரியத்தை போற்றி நமது அரசியல் சாசனத்தை உருவாக்கி நமக்கு அரசியலமைப்பை வழங்கியுள்ளனர்.


15 மடங்கு அதிகமாக கார்பனை வெளியேற்றிய வளர்ந்தநாடுகள்

தற்போது எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டிடம் நேரடியாக காலனி ஆதிக்கத்தின் கீழ் இல்லை. ஆனால், அதற்காக காலனித்துவ மனநிலை இல்லை என்று சொல்லிவிட முடியாது.வளர்ந்த நாடுகள் தாங்கள் வளர்வதற்காக உருவாக்கப்பட்ட பாதைகள், வளரும் நாடுகளுக்கு மூடப்படுகிறது. வளர்ந்த நாடுகளே கார்பன் வெளியேற்றத்தில் அதிக பங்களிப்பை செய்துள்ளன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கார்பன் வெளியேற்றம் 11 மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியா 1850- முதல் இன்றைய தேதி வரை வெளியிட்ட கார்பன் வெளியேற்றத்தை விட 15 மடங்கு அதிகமாக வளர்ந்த நாடுகள் கார்பனை வெளியேற்றியுள்ளன என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அத்வைத் ராமன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
26-நவ-202121:29:45 IST Report Abuse
 அத்வைத் ராமன் காங்கிரஸ் சகாப்தம் முடிந்துவிட்டது என்று சொன்னவர்கள் இன்னும் காங்கிரஸ் பற்றியே பேசிக்கொண்டிருப்பதேன்? பல தியாகங்களை செய்த குடும்பம் தலைமை ஏற்பதா வேண்டாமா என்பதை மக்கள் தானே முடிவு செய்ய வேண்டும். ஊழல் கட்சி காங்கிரஸ் என்று சொல்லுவதை இன்று வரை நிரூபிக்க முடியவில்லையே. காங்கிரஸ் தன்னை தானே பலவீனப்படுத்திக்கொண்டிருக்கிறது. அதுதான் பிஜேபியின் பலம்.
Rate this:
Cancel
26-நவ-202121:28:42 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ஒரு குடும்பத்தால் அந்த குடும்பத்துக்காகவே நடத்தப்படும் கட்சி" - காங்கிரஸைச் சாடிய மோடி ஐயா புலவரே.. உன் வூட்ல யாரும் இல்ல ஒண்டி கட்ட அப்படிங்கிற காண்டுல... சும்மா அடிச்சு விடாதே புலவரே. சாம்பிள் பாக்கிறியா கொஞ்சம் உன் கட்சில: 1. உன் Bjp la எல்லாம் 1-st குடும்பம் "அதானி குடும்பம்". 2. உன் Bjp la எல்லாம் 2-nd குடும்பம் "அம்பானி குடும்பம்" 3. எல்லா BJP deals, business இவங்களுக்க போகும். 4. அமித் சே பையன் ..குனிய முடியாத குண்டு பையன்.. Indian Cricket President... எப்படி தாத்தா அது மட்டும் நியாயம். சும்மா letter pad எடுத்து "ஜெய் சா" type பண்ணி பிசிசிஐ பிசிசிஐ இந்தியா Cricket sangham president ஆக்கி விடுவீங்க.. ஒரு புண்ணாக்கு ion இல்ல. இது என்ன அரசியல்.. அமித் ஷா வோட குண்டு பையன் கிரிக்கெட் விளையாட தெரியாதவன் BCCI Indian Cricket President Post குடுபீங்க.. என்னடா அரசியல் உங்க "bjp வாரிசு அரசியல்"... 5. நிடின் கட்கரி Nitin katkari paiyan MH la பெரிய அளவில் business Govt Tenders பண்றான். இன்னும் நெறியா இருக்கு..bjp வாரிசு அரசியல். "வாய் மூடி பேசவும் புலவரே" .. உங்க கட்சிக்கு அசிங்கமாய்டும்.. ஐயா.. " நாட்டுல யாரு ஜனநாயகம் பண்றாங்க..அது தாண் முக்கியம் தாத்தா.. சர்வாதிகாரம் பண்ற "குடும்பம் இல்லாத" அரசியல் மன்னாங்கட்டி அரசியல்." நான் பிடிச்ச முசலுக்கு மூணு காலு என்று பண்றது அரசியல் இல்ல ஐயா..
Rate this:
ravi - chennai,இந்தியா
27-நவ-202108:45:59 IST Report Abuse
raviதிமுக அல்லக்கைகள் மோடியின் பேச்சை கொச்சைப்படுத்துகிறார்கள். மோடி திமுக, கான்-கிராஸ், லல்லு RJD, கர்நாடக ஜனதா தளம், பாமக,சமாஜவாதி அரசியல் கட்சிகள் குடும்பக்கட்சிகளாக குடும்ப வளர்ச்சிக்காகத்தான் கட்சிகளை வியாபாரமாய் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதில் என்ன தவறு. திமுகவை உருவாக்கிய அண்ணாவின் சொத்தைவிட கள்ள ரயிலில் வந்து குடும்பக்கட்சிநிறுவனர் கருணாநிதியின் குடும்ப சொத்து ஒருலட்சம் மடங்கு இருக்காதா?கருணாநிதி உணவகம் அவர் கொள்ளையடித்த பணத்தில் நடத்தப்படட்டும் எதற்கு அரசு பணத்தை பயன்படுத்துவது. அதற்குத்தான் அம்மா உணவகம் இருக்கிறதே...
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
26-நவ-202119:58:38 IST Report Abuse
Dhurvesh உன்னிடம் இருந்து தான் நாங்கள் எங்களை காத்துக்கொள்ளனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X