தமிழ்நாடு

பொங்கும் மகிழ்ச்சி! உப்பாறு ஓடைகளில் திடீர் வெள்ளப்பெருக்கால்... நீண்ட இடைவெளிக்கு பிறகு நிரம்பும் அணை

Added : நவ 26, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, மழை நீர் ஓடைகளில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உப்பாறு அணையை தண்ணீர் எட்டியுள்ளதால், அணை நிரம்பும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், 50க்கும் மேற்பட்ட மழை நீர் ஓடைகளில், நீண்ட இடைவெளிக்கு பிறகு

உடுமலை: உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள, மழை நீர் ஓடைகளில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உப்பாறு அணையை தண்ணீர் எட்டியுள்ளதால், அணை நிரம்பும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், 50க்கும் மேற்பட்ட மழை நீர் ஓடைகளில், நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த ஓடைகள் வாயிலாக, நீர் வரத்து பெறும், உப்பாறு அணை, 16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் நிலையில் உள்ளது.வரப்பிரசாதமான மழை பி.ஏ.பி., பாசனத்தின் கசிவு நீர் அணை திட்டமாகவும், உடுமலை, பல்லடம் பகுதிகளில் பெய்யும் மழை நீரை சேமித்து, விவசாயத்திற்கு பயன்படும் வகையிலும், 1968ல் உப்பாறு ஓடையின் குறுக்கே, 1,100 ஏக்கர் பரப்பளவில், 2,256 மீட்டர் நீளத்தில், 572 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவுடன் உப்பாறு அணை கட்டப்பட்டது.அணை வாயிலாக, இடது கால்வாய் பாசனத்தில், 3,550 ஏக்கர்; வலது கால்வாய் பாசனத்தில், 2,510 ஏக்கர் என, 6,060 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
பாசனம் மட்டுமன்றி, சுற்றுப்புறத்திலுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.பருவ மழை குறைவு, பி.ஏ.பி., பாசன திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களினால், நீர் வரத்து குறைந்த அணையாகவும், வறட்சி பகுதியாகவும் மாறியது. ஆண்டுதோறும் குறைந்தளவு நீர் மட்டுமே கிடைத்து வந்தது. உப்பாறு அணை, கடந்த, 2005ல் நிரம்பியது; அதற்கு பின், வறண்டு காணப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு வட கிழக்கு பருவ மழையால், 16 ஆண்டுக்கு பின் நிரம்பும் வாய்ப்புள்ளது.உப்பாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், உப்பாறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேலும், பி.ஏ.பி., பிரதான கால்வாயிலிருந்து அரசூர் ஷட்டர் வழியாக திறக்கப்பட்ட நீர் மற்றும் ஏழு குளங்கள் நிரம்பி ராஜவாய்க்கால் வழியாக செல்லும் நீர் என, பல ஆண்டுகளுக்கு பின், பெரிய அளவிலான நீர் வழிப்பாதையை கொண்ட உப்பாறு மற்றும் கிளை ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணை வேகமாக நிரம்பியது.நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 24 அடியில், 22.25 அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 1,000 கன அடியாக காணப்பட்டது.அணை நிரம்ப இரண்டு அடி மட்டுமே உள்ள நிலையில், உப்பாற்றின் கரையோரத்திலுள்ள, உடுமலை, தாராபுரம் தாலுகா மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உப்பாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீர், அமராவதி ஆற்றில் கலக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X