துளிகள் செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : நவ 26, 2021
Share
Advertisement
பள்ளி மாணவர்களுக்கு பரிசுவால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், உடுமலையில் நடந்த ஜூனியர் புட்பால் போட்டியில் பங்கேற்றனர். 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான கால்பந்து போட்டியில், வால்பாறை அணியும், உடுமலை அணியும் மோதின. இதில், 2 - 0 என்ற கோல் கணக்கில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வால்பாறை

பள்ளி மாணவர்களுக்கு பரிசுவால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், உடுமலையில் நடந்த ஜூனியர் புட்பால் போட்டியில் பங்கேற்றனர். 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான கால்பந்து போட்டியில், வால்பாறை அணியும், உடுமலை அணியும் மோதின. இதில், 2 - 0 என்ற கோல் கணக்கில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சாந்தி, மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.வருவாய்த்துறையினர் ஆய்வுபொள்ளாச்சி அடுத்த நவமலையில், 35 குடிசைகள் அமைத்து, 60 குடும்பங்களாக பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கனமழை காரணமாக, அவர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதையடுத்து, பொள்ளாச்சி சப் -- கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், ஆனைமலை தாசில்தார் பானுமதி ஆய்வு செய்தனர்.பழங்குடியின மக்களுக்கு, மழையில் இருந்து தற்காத்துக்கொள்ள தற்காலிக தீர்வாக 'தார்பாலின் ஷீட்' மற்றும் கம்பளி தர திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு பட்டா வழங்கி, வீடுகள் கட்டித்தர, இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு கருத்தரங்கம்உடுமலை அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி வேலைவாய்ப்பு மன்றம் சார்பில் நடந்த, மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கத்திற்கு, கல்லுாரி செயலர் சஞ்சீவ் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், தஞ்சாவூரை சேர்ந்த ராமமூர்த்தி, டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., உட்பட போட்டித்தேர்வுகளை மாணவர்கள், அணுகுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், அரசு வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். ஏற்பாடுகளை, வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேஸ்வர், வேலைவாய்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சயலின் ஆகியோர் செய்திருந்தனர். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.வைக்கோல் இருப்பு வைப்புமடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில் நெல் பிரதான பயிராக உள்ளது.விவசாயிகள் கூறியதாவது: தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், பெரும்பாலான வயல்களில் இயந்திரங்கள் வாயிலாகத்தான் அறுவடை நடக்கிறது. இதனால் நிலங்களில் கிடக்கும் வைக்கோல்களை சேகரித்து கட்டுகள் உருவாக்குவதற்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. வயலில் பரவி கிடைக்கும் வைக்கோல் மீது இயந்திரங்களை இயக்கும்போது அவற்றை ஒன்று சேர்த்து கட்டுகளாக்கப்படுகிறது. ஒரு ஏக்கர் வைக்கோல், ஐந்து ஆயிரம் முதல் ஏழு ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.ஒரு ஏக்கர் பரப்பில், 20 முதல் 25 கட்டு கிடைக்கிறது. எங்கள் கால்நடைகளின் தேவைக்கு தகுந்த அளவில் இருப்பு வைத்து உலர் தீவனமாக பயன்படுத்துகிறோம். இது தவிர, அருகிலுள்ள மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் வாங்கிச்செல்கின்றனர். இவ்வாறு, தெரிவித்தனர்.மாணவிகளுக்கு எம்.எல்.ஏ., பாராட்டுகிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவி கிருத்திகா, மாநில அளவில் நடைபெற்ற, மணல் சிற்பம் போட்டியில் முதல் பரிசு பெற்றார். ஓவிய போட்டியில், மாணவி அனுசுயா முதல் பரிசு பெற்றார்.எம்.எல்.ஏ., தாமோதரன், மாணவிகளை சந்தித்து பாராட்டியதோடு, பொன்னாடை போர்த்தி, தேசிய அளவில் வெற்றி பெற்று சாதிக்கவும் வாழ்த்து தெரிவித்தார். தவிர, இரு மாணவிகளுக்கும் பயிற்சி அளித்த, பள்ளி ஆசிரியை கவுசல்யாவையும் பாராட்டினார்.சமூக சேவகருக்கு பாராட்டுபொள்ளாச்சி, கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது சமூக சேவையை பாராட்டி, அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.சென்னையில் நடந்த விழாவில் இவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இயக்குனர் சாந்தி ஓமகண்டம் தலைமையிலும், நீதிபதி கணேசன் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது.கஞ்சம்பட்டி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த போது, பள்ளி தரம் உயர்த்தல், பள்ளி மேம்பாடு மற்றும் நுாலகத்துக்கு சொந்த இடம் தானமாக வழங்கியது; ஊராட்சிதலைவராக பணியாற்றி ஊராட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.கட்டடம் சேதம்; மக்கள் அச்சம்மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி ஊராட்சியில், மக்கள் பயன்பாட்டிற்கான ரேஷன் கடை அரியநாச்சிபாளையத்தில் இயங்குகிறது. இந்தகடைக்கு பொருட்கள் வாங்க தினமும், பல நுாறு பேர் வந்து திரும்புகின்றனர்.இதில் பலர் கடையின் ஒரு பகுதியில் காத்திருந்து, குடிமைப்பொருட்களை பெற்றுச்செல்கின்றனர். தற்போது இந்த கட்டடத்தின் மேற்கூரை பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, உறுதியிழந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடைக்கு உட்புற மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது. ஜன்னலில் உள்ள லேப்ட் மிகவும் பழுதடைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, கட்டப்பட்ட இந்த கடையின் உறுதித்தன்மை தற்போது மிகவும் குறைந்துள்ளது. இதனால், பொருட்கள் வாங்க கடைக்குள் செல்லவே அச்சமாக உள்ளது. இது குறித்து அரசுத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வுசெய்வதோடு, மேற்கூரை இடிந்து விழுந்துள்ள இடங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.அரசு அறிவிப்பு அரசாணையாகுமா?வால்பாறை, நீலகிரி, தேனி மாவட்டம், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள தேயிலை, காபி எஸ்டேட்களில், 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள பேச்சு நடக்கிறது. கடந்த ஜூலை, 1ம் தேதியுடன் பழைய சம்பள ஒப்பந்தம் காலாவதியானது. இந்நிலையில், தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, தினக்கூலியாக, 425.50 வழங்க வேண்டும் என, தமிழக அரசு கடந்த மாதம், 18ம் தேதி அறிவித்தது. ஆனால், இதற்கான அரசாணை வெளியாகவில்லை. இதனால் தொழிலாளர்கள் கவலையடைந்தனர்.இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை சந்தித்த பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், அரசு அறிவித்துள்ளபடி தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வழங்க, அரசாணை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிசோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த, 'இல்லம் தேடி கல்வி' திட்ட விழிப்புணர்வுக்கான, கலை நிகழ்ச்சிகள் துவக்க விழாவுக்கு குடிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் பூங்கொடி தலைமை வகித்தார்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் மற்றும் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் கோப்பெருந்தேவி வரவேற்றார்.திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. கிராமம்தோறும் இத்தகைய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, வட்டார மேற்பார்வையாளர் (பொ) சுமதி, ஆசிரியர் பயிற்றுனர்கள் உமாமகேஸ்வரி, நித்யா, சுப்பிரமணி, ஷாகிரா பானு செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X