பதவியேற்ற நேரம் சரியில்லையோ!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பதவியேற்ற நேரம் சரியில்லையோ!'

Added : நவ 26, 2021 | கருத்துகள் (2) | |
'பதவியேற்ற நேரம் சரியில்லையோ!'திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும், தி.மு.க., நிர்வாகிகளிடம், பால்வளத் துறை அமைச்சர் நாசர் மனு பெற்றார்.பின், அவர் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, சோதனை காலமாகவே இருக்கிறது. முதலில், கொரோனா தொற்று பரவலை முடியறிக்கும் பொறுப்பு இருந்தது. இப்போது கடுமையான
 பக்க வாத்தியம்


'பதவியேற்ற நேரம் சரியில்லையோ!'



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும், தி.மு.க., நிர்வாகிகளிடம், பால்வளத் துறை அமைச்சர் நாசர் மனு
பெற்றார்.பின், அவர் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, சோதனை காலமாகவே இருக்கிறது. முதலில், கொரோனா தொற்று பரவலை முடியறிக்கும் பொறுப்பு இருந்தது. இப்போது கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்... கொரோனா, வெள்ள நிவாரணம் என ஓடிக் கொண்டே இருக்கிறோம்... பதவிக்கு வந்து ஏழு மாதம் ஆகியும் போராட்டமாகவே இருக்கிறது...' என்றார்.அங்கிருந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'ஸ்டாலின், முதல்வராக பதவியேற்ற நேரம் சரியில்லைன்னு சொல்லுறாரா...' என்றார்.அருகிலிருந்தவர், 'இவரின் அமைச்சர் பதவிக்கு, 'வேட்டு' வைக்கிறீங்க போல...' என்றதும்
சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X