பல விதங்களாகத் திரியும் தென்னாப்ரிக்க கோவிட் ரகம்; தொடரும் ஆய்வு

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021
Share
Advertisement
தென்னாப்பிரிக்கா நாட்டில் புதிதாக உருவெடுத்து இருக்கும் B1.1.529 ரக வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்தில் புதிய ரக வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.இந்த புதிய வகை வைரஸுக்கு ஏகப்பட்ட திரிபு நிலைகள் இருப்பது

தென்னாப்பிரிக்கா நாட்டில் புதிதாக உருவெடுத்து இருக்கும் B1.1.529 ரக வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்தில் புதிய ரக வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.



latest tamil news




இந்த புதிய வகை வைரஸுக்கு ஏகப்பட்ட திரிபு நிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. புதிய ரக வைரஸ் எவ்வாறு திரிந்து பரவுகிறது என்பதைப் பொறுத்தே இதன் தன்மை விஞ்ஞானிகளால் கண்டறியப்படும். தென்னாபிரிக்காவில் குறைவான முன் களப்பணியாளர்களுக்கு மட்டுமே 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தை அடுத்து அடுத்த வாரமும் உலக சுகாதார அமைப்பின் முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளனர். அதே சமயத்தில் இந்த புதிய ரக வைரஸ் தாக்கத்தைக் கண்டறியும்வரை மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிட வேண்டாம் என்று உலக சுகாதார விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளது.


latest tamil news




பிரிட்டனுக்கு வரும் விமானங்கள் தடை


நமீபியா, லெசோதோ, போஸ்வானா, எஸ்வாதினி, ஜிம்பாபே உள்ளிட்ட பல ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தென்னாப்ரிக்காவில் இதுவரை 5 சதவீதத்துக்கும் குறைவான மக்களே வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X