அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கலைஞர் உணவகம்' அ.தி.மு.க., கண்டனம்

Updated : நவ 28, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை : 'வருங்காலத்தில், 500 சமுதாய உணவகங்கள், 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக, உணவுத் துறை அமைச்சர் கூறியிருப்பது, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:இந்தியாவில், 'மாதிரி சமுதாய சமையல் கூடம்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம்
'கலைஞர் உணவகம்' அ.தி.மு.க., கண்டனம்

சென்னை : 'வருங்காலத்தில், 500 சமுதாய உணவகங்கள், 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக, உணவுத் துறை அமைச்சர் கூறியிருப்பது, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:இந்தியாவில், 'மாதிரி சமுதாய சமையல் கூடம்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது.
இதில், தமிழக உணவுத் துறை அமைச்சர், 'வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள், கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளது' என பேசி உள்ளார்.இது, 'அம்மா உணவகம்' என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி உடையதாக உள்ளது.

நடைமுறையில் உள்ள, அம்மா உணவகம் திட்டத்தை, அதன் பெயரிலேயே விரிவுபடுத்தாமல், புதிதாக கலைஞர் உணவகம் என பெயர் வைப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது.
புதிதாக தீட்டப்படும் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில், அ.தி.மு.க.,வுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.அதேநேரம் நடைமுறையில் உள்ள திட்டத்தை, இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது, இதுவரை நடைமுறையில் இல்லாத, வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
எனவே, புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும், அவை தமிழகம் முழுதும், அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
27-நவ-202122:35:06 IST Report Abuse
Nagercoil Suresh ஒரு பெரிய நிறுவனம் புதிதாகஇன்னொரு நிறுவனத்தை வாங்கினால் முதலில் இரண்டு நிறுவனத்தின் படமும் இருக்கும் வாங்கப்பட்ட நிறுவனத்தின் படம் பெரிதாகவும் வாங்கிய நிறுவனத்தின் படம் சிறியதாகவும் முதலில் ஒளிரும் போகப்போக வாங்கப்பட்ட நிறுவனத்தின் படம் அல்லது லோகோ காணாமல் போகும் இதற்கு காரணம் மக்கள் மனதில் படிப்படியாக தான் இன்னொரு நிறுவனத்தை புகுத்துவார்கள் அதே நிலை தான் இந்த இரண்டு கழக கம்பெனிகளிலும்...அரசு பணத்தில் கழகங்களுக்கு தீபாவளி தான் ...
Rate this:
Cancel
muthu - tirunelveli,இந்தியா
27-நவ-202120:50:39 IST Report Abuse
muthu pl remove amma appa name for govt sector . Keep corrupt free politician name like kakkan etc
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
27-நவ-202120:38:56 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் ஆர் எஸ் பி ஊடகங்களில் முன்னணியில் இருப்பது தந்தி தனது பெயரை வைத்து இந்த கேவலத்தை துவக்கியது கருணாநிதிதான் என்று ஆதாரத்துடன் சொன்ன பிறகு "இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அவலம் இல்லையா?" என்று பல்டியடித்தார் மனுஷ்ய புத்திரன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X