பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உஷ்ஷ்ஷ்!: மகன் - மருமகன் மோதல்; முதல்வர் 'பஞ்சாயத்து'

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
மகன் - மருமகன் மோதல்; முதல்வர் 'பஞ்சாயத்து' தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்ததில், முதல்வரின் குடும்ப உறவினர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. கூட்டணியை முடிவு செய்வது, ஆலோசகரை நியமித்து பிரசாரத்தை முன்னெடுத்தது, சமூக வலைதளங்களில் ஆதரவு நிலையை உருவாக்கியது போன்ற பணிகளை, மருமகன் கவனித்தார்.மகன் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தார். ஆட்சிக்கு வந்த நிலையில்,


மகன் - மருமகன் மோதல்; முதல்வர் 'பஞ்சாயத்து'
latest tamil newsதி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடித்ததில், முதல்வரின் குடும்ப உறவினர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. கூட்டணியை முடிவு செய்வது, ஆலோசகரை நியமித்து பிரசாரத்தை முன்னெடுத்தது, சமூக வலைதளங்களில் ஆதரவு நிலையை உருவாக்கியது போன்ற பணிகளை, மருமகன் கவனித்தார்.

மகன் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தார். ஆட்சிக்கு வந்த நிலையில், கட்சி பணிகளை மகன் கவனிப்பது; நிர்வாக ரீதியான பணிகளை மருமகன் கவனிப்பது என முடிவானது. ஆனால், நிர்வாக ரீதியாக என்று மகன் கூறியதை, மருமகன் ஏற்கவில்லை; கட்சி விஷயத்திலும் அவர் தலையிடுவதாக முதல்வரின் மகன் கடும் கோபத்தில் உள்ளார்.

சமீபத்தில், சினிமா ஷூட்டிங் முடித்து வந்த மகன், கட்சி விஷயத்தில் மருமகனின் தலையீடு குறித்து, தந்தையிடம் புகார் வாசித்துள்ளார். தந்தையின் யோசனைப்படி, மருமகனே நேரடியாக மகனிடம் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. தந்தை பஞ்சாயத்து செய்தும், இருவரும் சமாதானமாகவில்லை.

அதனால் இருவரையும் சமாதானப்படுத்தும் பணி, மகனின் நண்பரான இளம் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருவரையும் கைகோர்க்க வைக்க, அவர் துாதராக செயல்பட்டு வருகிறார். சில உறவினர்களும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளனராம். இது தான் ஆளுங்கட்சியில் தற்போது, 'ஹாட் டாபிக்' ஆக உள்ளது.


'அ, ஆ' தெரியாதா? ஆசிரியர்கள் அதிர்ச்சிlatest tamil newsஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு, மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் பல மாதங்கள் வீட்டிலேயே இருந்ததால் மன அழுத்தத்தில் இருப்பர்; எனவே, அவர்களுக்கு உடனே பாடம் நடத்தாமல், உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்குவது, ஓவியம், பாடல், கலை நிகழ்ச்சிகள் என, புத்துணர்வு நிகழ்ச்சிகளை, இரண்டு வாரங்கள் நடத்த அரசு உத்தரவிட்டது.

இதை பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திய அரசு பள்ளிகள், கடந்த வாரம் முதல் பாடங்களை நடத்த துவங்கியுள்ளன. இதில், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதை ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். பல அரசு பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தமிழ் எழுத்துக்களே மறந்து விட்டதாம்.

அ, ஆ, இ, ஈ... என, உயிர் எழுத்துக்களும், க், ங்... என்ற மெய் எழுத்துக்களும் பெரும்பாலான மாணவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. இதனால், எட்டாம் வகுப்பு வரை தமிழ் எழுத்துக்களை மீண்டும் கற்றுத்தரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறும், அரசுப் பள்ளி மாணவர்களில் பலருக்கு, தமிழ் எழுத, படிக்க கூட தெரியாத அபாய நிலை ஏற்படும் என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.


எம்.எல்.ஏ.,க்கள் பாராமுகம் சென்னை மக்கள் அதிருப்திlatest tamil newsசென்னையில் இம்மாத துவக்கத்தில் பெய்த மழையில், பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழை பெய்த மறுநாளில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் நேரடியாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றார்.தண்ணீரில் நடந்து சென்று பாதிப்புகளை பார்வையிட்டார்;

மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினார். ஆனால், சென்னையில் உள்ள தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அதிகம் தலைகாட்டவில்லை.'டிவி' விவாதங்களில் பங்கேற்று பிரபலமாகி, எம்.எல்.ஏ.,வான ஒருவரை, 'டிவி' நிருபர்கள், மழை நீர் தேங்கியுள்ள பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அவர் குறிப்பிட்ட துாரம் சென்றதும், மேற்கொண்டு செல்ல மறுத்துள்ளார். மறுநாள் என்னை அழைக்காதீர்கள் என்றும் கூறியுள்ளார்.இதுபோல வேறு சில எம்.எல்.ஏ.,க்களும் பெயரளவுக்கு சில பகுதிகளை மட்டும் பார்வையிட்டுள்ளனர். இப்படி இருந்தால் எப்படி என, கட்சியினரே புலம்புகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-நவ-202104:05:39 IST Report Abuse
Natarajan Ramanathan முன்பு ஸ்டாலினா? அளகிரியா? என்று வதந்தி கசியவிட்டு கட்சியினர் எவரும் குடும்பத்துக்கு வெளியே வேறு யாரை பற்றியும் சிந்திக்காமல் இருக்க வைத்தனர். அதுபோலவே இப்போதும் சின்ன ஸ்டாலினா? சபரீசனா? என்று பிலிம் காட்டி கொத்தடிமைகள் எவரும் குடும்பத்துக்கு வெளியே வேறு எவரை பற்றியும் யோசிக்காமல் இருக்க வைக்கும் தந்திரம் தான் இதுவும்.....
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
27-நவ-202123:10:50 IST Report Abuse
Mohan இப்போதுள்ள இளம் ஆசிரியர்கள் பலர் ஆல் பாஸ் ஸ்கீமில் வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கே தமிழ் ஹி ஹி... நஹி.
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
27-நவ-202122:45:12 IST Report Abuse
Nagercoil Suresh உறவினர் தான் இந்த உலகத்தில் முதல் எதிரி, நீ மருத்துவ மனைக்கு செண்டால் உள்ளே சிரித்தபடி வெளியே அழுவார்கள் அதே நேரம் உனக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்தால் வெளியே சிரித்தபடி உள்ளே அழுவார்கள் இது தான் மனிதனின் குணம்.. முதல்வரும் பிரதமரும் சந்திரனிலிருந்து நேரே இறங்கியவர்கள் கிடையாது அவர்களும் நம்மைப்போல் ஒரு சாதாரண மனிதர்கள் தான், குடும்ப பிரச்சினை என்பது மிகவும் சாதாரணமானது தான் இதை பெரிது படுத்துவது தேவையில்லாதது, ஊர் சண்டை கண்ணுக்கு குளுமை என்பதை போல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X