புதிய வகை வைரசின் பெயர் ''ஒமிக்ரான்'' : தடுப்பூசிக்கு கட்டுபடாதாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி:' தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசிற்கு ''ஒமிக்ரான்'' என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு.தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ், 'டெல்டா' வகை வைரசை விட மிகவும் மோசமானது' என, விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தனர். தற்போது தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு வகை
WHO designates B.1.1529 as 'variant of concern'; EU bans travel from South Africa

புதுடில்லி:' தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசிற்கு ''ஒமிக்ரான்'' என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ், 'டெல்டா' வகை வைரசை விட மிகவும் மோசமானது' என, விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தனர்.

தற்போது தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு வகை வைரஸ் திடீரென பாதிப்பு, 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு பி.1.1.529 என்ற புதிய கொரோனா வைரஸ் வகை தான் காரணம் என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் வகைக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டாமல் இருந்தது.


latest tamil news




இந்நிலையில் நேற்று இந்த வகை வைரசிற்கு ''ஒமிக்ரான்'' என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ், தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் வேகமாக பரவக் கூடியது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதை 'கவலைக்குரிய வைரஸ் வகை' என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதர வைரஸ் வகைகளை விட இந்த வைரஸ் வேகமாக பரவும் என்பதுடன், தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.



Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balaji - chennai,இந்தியா
27-நவ-202115:28:38 IST Report Abuse
balaji அதற்கு பாஜக இல்லாத பாரதம் உருவாக உறுதி மொழி எடுத்துக் கொள்வோம் - இப்படிக்கு கட்டுமர சொம்பு
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
27-நவ-202114:11:26 IST Report Abuse
elakkumanan அப்போ, இன்னொருமுறை , திரு மோடி அவர்களை திட்டவும் வெளிநாட்டு மீடியா கிட்ட காசு வாங்கவும் வாய்ப்பு இருக்கு... அப்பாடி.................இந்த முறை, கவனமாக சம்பாரிக்கணும்....தனிமனித விமர்சனங்களை தவிர்க்கணும் , அதுனால , முதல்வர் அய்யாவையும் அந்த கட்சியையும் விமர்சனம் பண்ணாம, திரு மோடியை தாறுமாறா விமர்சனம் செய்து, ஊடக மற்றும் கருத்து சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்வோம்...............
Rate this:
Cancel
Bala - chennai,இந்தியா
27-நவ-202113:57:24 IST Report Abuse
Bala எங்க ஊரு போலி டுமீல் போராளிகள், அர்பன் நக்ஸல்கள், தேடி தேடி மதமாற்றம் செய்யும் கும்பல்கள் போன்ற பல வைரஸ்கள் உள்ளன. அதற்கு முன்னால் எந்த ஓமிக்ரனும் நிக்க முடியாது. சீனாக்காரன் புதுசா ஏதாவது கண்டுபுடுச்சாதான் உண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X