பொது செய்தி

இந்தியா

இது உங்கள் இடம்: பொறுமைக்கும் எல்லை உண்டு!

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (86)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர். ரவி, வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலம் ஆகிய இரு முக்கிய காரணங்களால், மத்திய பா.ஜ., அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும், 'வாபஸ்' வாங்கி இருக்கிறது. காரணம் இருந்தாலும்,உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ஆர். ரவி, வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலம் ஆகிய இரு முக்கிய காரணங்களால், மத்திய பா.ஜ., அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும், 'வாபஸ்' வாங்கி இருக்கிறது.latest tamil newsகாரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போராட்டம் நடத்தும் மனோபாவம் உடைய கம்யூனிஸ்ட்களால், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியதை ஜீரணிக்க முடியவில்லை. டில்லியில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த விவசாய, 'ஏஜென்டு'களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை, அவர்களால் தாங்கி கொள்ள இயலவில்லை.'

பார்லிமென்ட் நோக்கி, 500 டிராக்டர்களில் விவசாயிகள் ஊர்வலம்' என்று அறிவித்து, 'ஆறு கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்' என்று அறிவித்திருக்கிறார், பாரதிய கிஸான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்.latest tamil news


'விட்டு கொடுப்போர் கெட்டுப் போவதில்லை' என்பது ஆன்றோர் வாக்கு. நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் கருதி, மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்கி இருக்கிறது, மத்திய அரசு. அதாவது, விட்டுக் கொடுத்து இருக்கிறது.

ஆனால், தங்கள் ஆறு அம்ச கோரிக்கை நிறைவேறுவது வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கிறார், ராகேஷ் ராகேஷ் திகாயத்.அதாவது போராட்டம் முடிவுக்கு வந்ததை திகாயத்தால் ஏற்று கொள்ளவும், ஜீரணிக்கவும் இயலவில்லை. 'போராட்டம் தொடரும்' என்கிறார்.அதாவது, 'கெட்டுப் போகிறவர் விட்டுக் கொடுப்பதில்லை' என்ற ஆன்றோர் வாக்கை நிரூபிக்க முயற்சிக்கிறார். இதற்கிடையே, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி, 'தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, மத்திய அரசு சட்டம் இயற்றினால், நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்' என்று, 'படம்' காட்டுகிறார்.

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் வாங்கி இருப்பது, எதிர் கட்சிகளுக்கு ஏளனமாக போய் விட்டது. மத்திய அரசை மிரட்டி, பணிய வைக்க முயற்சிக்கின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி பொறுமையாக இருக்கிறார் என்றால், அடக்குமுறையால் குடிமக்கள் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே ஒரு நோக்கம் தான்.அந்த பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு!

அளவுக்கு மீறி ஆட்டம் போடத் துவங்கினால், மறைந்த பிரதமர் இந்திரா அறிவித்தது மாதிரி, 'எமெர்ஜென்சி'யை அறிவித்தால், இவர்களால் என்ன செய்ய முடியும்?

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
27-நவ-202120:40:44 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan திருச்சியில் ஒருமுறை அன்றைய முதல்வர் எடுத்த கடும் நடவடிக்கையில் அவர் உயிருடன் இருந்தவரை எவனும் ...கட்டவில்லை. அப்படி மோடி நடவடிக்கை எடுத்தால் டில்லி கூலிப்பட்டாளம் அடங்கும்
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
27-நவ-202120:31:06 IST Report Abuse
Dhurvesh வெண்ணை வெட்டி சிப்பாய் இங்கு கருது போடுகிறான். 700 பேர் செத்தார்களே அப்போ எங்கே போனான் ravi மொடாக்குடி ஊர்காரன் இவன் எல்லாம் கருது, tissue sheet க்கு ஆகாது அப்புறம் இவனை ஒரு பெரிய ஆள் என்று, சோற்றிற்கு என்ன மோடி போல் சீனா தைவான் காளான் சாப்பிடும் கோட்டம் போல
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
27-நவ-202120:17:14 IST Report Abuse
M  Ramachandran இது விவசாயிகள் போராட்டமாக தெரிய வில்லையை போராட்டம் செய்பவர்களுக்கு இங்கிருந்து வயித்தெரிச்சல் கட்சிகளும் அயல்நாட்டு கூலிகளும் பணம் கொட்டி கொண்டிருப்பதினால் இந்த இடை தரகு கும்பல் வருமானம் நின்று விடுமென என்ற ஆதங்கத்தில் சும்மா உதார் விட்டுக்கொண்டேனா இருந்தால் தான் நிம்மதியாக ஏ சி ஹீட்டர் சதம் கூடாரம் போட்டு சீட்டாடி பொலுது பொங்கி kondirukkiraargal. உண்மையான விவாசாயிகளுக்கு ஏ சி ஹீ ட்ட ர் வசதி கிடைக்குமா? இவளவு நாட்கள் நிலத்தை பார்க்காமல் இருக்க முடியுமா என்று மக்கள் எதிர் கேள்வி கேட்டல் இந்த புளுகு மூட்டைகள் எப்படி பதில் சொல்வார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X