கோவை: இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை, கலெக்டர் சமீரன் நேற்று தொடங்கி வைத்தார்.பள்ளிக்கல்வி துறை சார்பில் தன்னார்வலர்கள் மூலம் 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன பயணம் நேற்று தொடங்கியது. வாகன பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர் சமீரன் கூறியதாவது:மாணவர்களுக்கு புதிய கற்றல் வாய்ப்பை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த கல்வியாண்டில் 6 மாத காலத்துக்கு, தன்னார்வலர்களின் மூலம் கல்வி பயிற்றுவிக்கப்படும். திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல கலைக் குழுவினர் உதவியுடன், விழிப்புணர்வு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வீதி நாடகம், பொம்மலாட்டம், கதை சொல்லுதல், திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த கலைக்குழுவினர், 35 நாட்கள் மாவட்டம் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE