தமிழ்நாடு

13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே பகுதியில்...! நிரந்தர தீர்வு காணாத ரயில்வே, வனத்துறையே காரணம்

Added : நவ 27, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை வனக்கோட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு, கேரள வழித்தடத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் இறந்த பின்னும், வனத்துறை, ரயில்வே துறை இணைந்து யானைகளைக் காக்க உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தற்போது அதே வழித்தடத்தில் மீண்டும் ரயில் மோதி, மேலும் மூன்று யானைகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், யானை-மனித மோதல் ஆண்டுக்கு ஆண்டு


கோவை வனக்கோட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு, கேரள வழித்தடத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் இறந்த பின்னும், வனத்துறை, ரயில்வே துறை இணைந்து யானைகளைக் காக்க உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தற்போது அதே வழித்தடத்தில் மீண்டும் ரயில் மோதி, மேலும் மூன்று யானைகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.latest tamil news


கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், யானை-மனித மோதல் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. யானைகளின் வழித்தடங்களில், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், மத்திய, மாநில அரசுகளின் கட்டடங்கள் என பலவிதமான தடுப்புகள் வந்து விட்டதால், யானைகள் தடம் மாறி, ஊர்களுக்குள் ஊடுருவுவதும், மனிதர்களைத் தாக்குவதும் அடிக்கடி நிகழ்கிறது.

காட்டு யானைகளிடமிருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து காட்டு யானைகளையும் காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை தமிழக வனத்துறை எடுக்காமல், அன்றன்றைக்கு பிரச்னைகளை சமாளித்து வருகிறது.

இதேபோல, வனப்பகுதிகளுக்குள்ளும் யானைகளுக்கு ஏற்படும் பலவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது. முக்கியமாக, வனப்பகுதிக்குள் உள்ள ரயில் பாதைகளை, காட்டுயானைகள் கடக்கும்போது, ரயில்களில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது, வன உயிரின ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.


latest tamil news


ஏனெனில், கடந்த 2008ம் ஆண்டு, பிப்., 4ம் தேதியன்று அதிகாலை 1:30 மணிக்கு, இதே கோவை வனக்கோட்டப்பகுதியில் ரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அப்போது நான்கு காட்டு யானைகள், பல மாதங்களாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் அவ்வப்போது வலம் வந்து கொண்டிருந்ததால், பொது மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி இருந்தனர்.

அதனால் அந்த யானைகளைத் துரத்துவதற்கு பலவிதமான முயற்சிகளை வனத்துறை எடுத்துக் கொண்டிருந்தது. அப்படி துரத்தப்பட்டதில் மூன்று யானைகள் தான், மதுக்கரை குரும்பபாளையம் அருகே ரயில் மோதி இறந்தன. ஈரோட்டில் சர்வீஸ் செய்யப்பட்டு, பயணிகள் இல்லாமல் எட்டு ரயில் பெட்டிகளுடன் பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்த கோவை- - பாலக்காடு - -சொர்ணுார் பாசஞ்சர் ரயில் மோதி, 30 வயது நிறைந்த கர்ப்பிணி யானை, 20 மற்றும் 10 வயதுள்ள இரண்டு ஆண் யானைகள் அந்த விபத்தில் பலியாயின.

கர்ப்பிணி யானையின் வயிற்றில் இருந்த குட்டி யானையே வெளியில் விழுந்து உயிரிழந்த கொடுமையும் நிகழ்ந்தது. இவ்வளவு அகோரமான ஒரு விபத்தை பார்த்த பின்னும், அதற்குப் பின் அதே பகுதியில் பல யானைகள் ஒவ்வொன்றாக ரயிலில் அடிபட்டு இறந்தபோதும், கடந்த, 13 ஆண்டுகளில் இதை தடுப்பதற்கு, வனத்துறை, ரயில்வே துறை இரண்டுமே எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக, நேற்றிரவு 10:05 மணிக்கு, மீண்டும் அதே பகுதியில் கேரள வழித்தடத்திலிருந்து வந்த ரயில் மோதி, மேலும் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.இந்த வனப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை (30 கி.மீ., வேகம்) விட அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுவதே இதற்குக் காரணமென்பதே இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டாக உள்ளது.

-நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
27-நவ-202114:51:07 IST Report Abuse
sridhar ரயிலை வேகமாக ஓட்டிய வரை முதலில் தண்டியுங்கள் பிறகு எல்லாம் சரியாகிடம் கடுமையா தண்டிக்கப்படவேண்டும் அவ்வளவுதான் அத செய்யாம வேற சொல்லி என்ன பயன்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
27-நவ-202108:45:14 IST Report Abuse
Balaji தண்டவாளத்தில் எதேச்சையாக நிற்கும் யானையை என்ன நிரந்தர தீர்வு கண்டு விளங்குவீர்கள் என்று புரியவில்லை... அந்த வழியே தண்டவாளம் போட்டாகி விட்டது.. ரயில் ஓடினால் தான் மக்கள் அங்கும் இங்கும் செல்ல முடியும்.. தண்டவாளத்தின் இருபுறமும் சுவர் எழுப்பலாம் என்று கூறுகிறீர்களா? அப்படி எழுப்பினால் யானைகள் எவ்வாறு ஒருபுறமிருந்து அந்தப்புரம் செல்லும்? இல்லை தண்டவாளத்தில் மின்சாரம் வைத்து மைல்டு ஷாக் கொடுத்து யானை நிற்காமல் செல்ல செய்யலாம் என்கிறீர்களா? ஷாக் அடித்த யானை மதம் பிடித்து பயத்தில் ஓடினால் என்ன செய்வது? அமெரிக்காவில் பல இடங்களில் நெடுஞ்சாலைகளில் முயல்கள், மான்கள் என்று தினமும் அடிபட்டு இருக்கத்தான் செய்கின்றன.. இதற்க்கு நிரந்தர தீர்வு என்றெல்லாம் ஒன்றும் இருப்பதாக தோன்றவில்லை.. போக்குவரத்தை நிடுத்திக்கொள்ளலாம் வேண்டுமென்றால்...
Rate this:
Govind - Delhi,இந்தியா
27-நவ-202110:13:16 IST Report Abuse
Govindமுதலில் பிரச்னை என்ன என்பதையே புரிந்து கொள்ளாமல் .. அமெரிக்காவில் முயல் சாலையில் அடிபட்டு இறப்பதற்கு இந்த பிரச்சனைக்கும் முடிச்சு போட்டு நீங்களே தீர்ப்பும் எழுதுவிட்டீர்கள் . முதலில் யாரும் ரயில் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்ல வில்லை ... மாறாக வண்டியை முப்பது கிலோ மீட்டர் வேகத்திற்கு செலுத்த வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார்கள். ரயில் மெதுவாக செல்லும் போது அதை எளிதில் நிறுத்த முடியும் மேலும் யானைகள் வெளிச்சத்தையும் சத்தத்தையும் கேட்டு மிரளாமல் இருக்கும். அதனால் அவை மெதுவாக கடக்கும். இந்த அடிப்படையில் தான் வனம் வழியாக ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது .. இந்த ரயில் ஓட்டுனர்கள் இதை கேட்பதாய் கிடையாது. இங்கு இறந்து போனது யானை குட்டிகள்....நம் பிள்ளைகள் மாதிரி அவை .. இது கூட புரியாமல் ஷாக் கொடுக்கலாமா வேணாமா என்று ஏதேதோ சொல்லுகிறீர்கள்....
Rate this:
sivan - seyyur,இந்தியா
27-நவ-202117:54:51 IST Report Abuse
sivan அதானே தண்டவாளம் கிட்டத்தட்ட பல கிலோ மீட்டர்கள் செல்லும் இந்த வழி நெடுகிலும்.. தண்டவாளத்தை சுற்றிலும் தடுப்பா போட முடியும்? ஒரு ஆலோசனை பின்பற்றலாம். வேகத்தை குறைக்கலாம். .. ஆனால் எந்த இடத்தில் யானை வரும் என்று எப்படி டிரைவருக்கு தெரியும்? டிஜிடல் மூலமாக யானை அந்த இடத்தின் அருகில் இருந்தால் கண்டுபிடிக்க ஒரு வழி செய்து ....கண்ட்ரோல் ரூமில் இருந்து டிரைவருக்கு தகவல் சொல்லலாம்....
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
27-நவ-202107:47:42 IST Report Abuse
 rajan Please don't repeat the same comments
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X