மதுரை : 'இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்' வசிப்பிடம் மாறி நியமிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கான உத்தரவு 'தினமலர்' செய்தி எதிரொலியாக திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை சார்பில் சென்னை, மதுரை உட்பட 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர் வசிக்கும் இடத்தில் இருந்து தொலைதுார மையங்களில் நியமிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தன்னார்வலர் வசிப்பிடம் பகுதியில் உள்ளமையங்களில் தான் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சில பகுதிகள், தாலுகாக்களில் ஒரே பெயர் கொண்ட நகர்கள், தெருக்கள் உள்ளன. தன்னார்வலர் விவரம் பதிவேற்றம் செய்த போது பலர் சுருக்கமாக தங்கள் முகவரியை தெரிவித்துள்ளதால் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட மையங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தன்னார்வலர்கள் உரிய பி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களிடம் விண்ணப்பித்தால் மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்படும். குழப்பம் தேவையில்லை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE