பொது செய்தி

இந்தியா

டில்லி கமிஷனர் நியமனம்; உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்'

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :டில்லி போலீஸ் கமிஷனர் நியமனத்துக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் மத்திய அரசு மற்றும் ராகேஷ் அஸ்தானாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.டில்லி போலீஸ் கமிஷனராக பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படை இயக்குனர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானாவை, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.குஜராத் கேடரின் மூத்த ஐ.பி.எஸ்.,
 டில்லி கமிஷனர் நியமனம்உச்ச நீதிமன்றம் 'நோட்டீஸ்'

புதுடில்லி :டில்லி போலீஸ் கமிஷனர் நியமனத்துக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் மத்திய அரசு மற்றும் ராகேஷ் அஸ்தானாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டில்லி போலீஸ் கமிஷனராக பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படை இயக்குனர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானாவை, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.
குஜராத் கேடரின் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், ஏற்கனவே சி.பி.ஐ.,யில் சிறப்பு இயக்குனராக பணியாற்றி உள்ளார்.


latest tamil newsஇவர் பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களே இருந்த நிலையில், டில்லி கமிஷனராக நியமிக்கப்பட்டதை எதிர்த்தும், ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்தும், பொது நல வழக்குகளுக்கான மையம் என்ற அரசு சாரா அமைப்பு டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ராகேஷ் அஸ்தானா நியமனத்தில் முறைகேடு எதுவும் இல்லை' என, உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், வழக்கை விரைவாக விசாரிக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கமிஷனர் ராகேஷ் அஸ்தானா மற்றும் மத்திய அரசு இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி, 'நோட்டீஸ்' அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-நவ-202119:47:15 IST Report Abuse
அப்புசாமி மறுமலர்ச்சி பார்ட்டியின் வேலை. இந்தியாவுல வயசுக்காரனுங்க எல்லோரும் தத்திகள். அதான் வயோதிகர்களுக்கு பணி நீட்டிப்பு குடுத்து அசத்துறாங்க.
Rate this:
Cancel
காஷ்மீர் கவுல் பிராமணன். இதென்ன நேஷனல் ஹெரால்டு வழக்கா?இல்லை 2G வழக்கா?இல்லை agusta ஹெலிகாப்டர் வழக்கா?பொறுமையாக விசாரிப்பதற்கு அதனால் உடனே மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
27-நவ-202111:53:44 IST Report Abuse
r ravichandran இது போன்ற பணி நீட்டிப்பு என்பது நேரு காலத்தில் இருந்தே ஆரம்பித்து விட்டது. இது எல்லா மாநிலங்களிலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடைபெறும் ஒன்று. தங்கள் ஆட்சிக்கு ஒத்து வராத அதிகாரிகளை மாற்றுவதும் , தனக்கு சாதகமாக இருப்பார் என்று கருதும் ஜூனியர் அதிகாரிகளை அந்த இடத்திற்கு கொண்டு வருவதும் தொடர்ந்து நடை பெறுகிறது. ஆனால் இதில் பாதிக்க படுபவர், அடுத்த இந்த பதவிக்கு வர காத்திருக்கும் அதிகாரி , இந்த பதவி நீட்டிப்பு காரணமாக , அந்த பதவிக்கு வர முடியாமல் ஒய்வு பெறும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதில் தமிழ் நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. எத்தனையோ நேர்மையான , நிர்வாக திறமை மிக்க அதிகாரிகள் தலைமை செயலர் (Chief secretary), தலைமை போலீஸ் அதிகாரி (DGP) , போன்ற உயர் பதவிக்கு வர முடியாமல் ஒய்வு பெற்று இருக்கிறாரகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X