கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்; சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : 'கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள் உள்ளனர்; அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழு திருப்தியில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்'


சென்னை : 'கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள் உள்ளனர்; அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழு திருப்தியில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.



latest tamil news


கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.



வாடகை பாக்கி


இதையடுத்து, வாடகை உயர்த்தப்பட்டதற்கான உத்தரவை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: வாடகை பாக்கியை செலுத்தாமல், கோவில் சொத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். 1960ம் ஆண்டில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகள் முடிந்த உடன், குத்தகை காலம் காலாவதியாகி விடும். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குத்தகையை அனுமதித்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அதனால், அனுமதிஇன்றி இருப்பதாக தான் கருத வேண்டும். அனுமதியின்றி ஒருவர் இருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டால், வாடகை பாக்கியை செலுத்துவதன் வாயிலாக, அவருக்கு குத்தகை உரிமை வந்து விடாது.


latest tamil news



அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை, இந்த நீதிமன்றம் கவனித்துள்ளது. கோவில் சொத்துக்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும். வாடகை வசூல், குத்தகை, நியாயமான வாடகை நிர்ணயம் விஷயங்களில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சொத்துக்களில் சட்டவிரோதமாக ஏராளமானோர் உள்ளனர்.

எந்த அனுமதியும் பெறாமல், குத்தகைதாரர்கள் வசம் கோவில் சொத்துக்கள் உள்ளன. இது குறித்து அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையில் முழு திருப்தி இல்லை.துஷ்பிரயோகம்தனி நபர்களுடன், அதிகாரிகள் சிலர் கைகோர்த்து செயல்படுகின்றனர். கோவில் சொத்துக்களில் அறங்காவலர்கள் அல்லது அதிகாரிகளின் துாண்டுதலில் ஊழல் நடக்கிறது.

இத்தகைய செயல்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், கடவுளின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறோம் என்பதை மறந்து விடுகின்றனர்.கோவில் சொத்துக்கள், பக்தர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், பலர் நன்கொடை அளிக்கின்றனர்.

அவர்களின் விருப்பத்தை மதிக்கவில்லை என்றால், அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் பாவம் செய்வதாக கருதப்படுவர். கோவிலில் உள்ள தெய்வங்களின் உரிமைகள் மீறப்படுவதை, நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது.

இந்த வழக்கை பொறுத்தவரை, தற்போதைய நிலையில், மனுதாரர் குத்தகைதாரர் அல்ல. எனவே, மூன்று மாதங்களுக்குள் சட்டப்படி அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு உரிமை உள்ளது என்றால், அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
27-நவ-202119:18:11 IST Report Abuse
r.sundaram இதனாலேயே இந்து கோவில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. குத்தகையை ஒழுங்காக வசூலிப்பது இல்லை. கட்சிக்காரர்களுக்கு குத்தகைக்கு விடுவது. குத்தகை எடுத்தவர், அதை தான் உபயோகப்படுத்தாமல் கீழ் குத்தகைக்கு விடுவது, இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது போன்ற செயல்கள் இல்லாமல் இருக்கும் ஒரு கோவில் கூட தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஆதி முதல் அந்தம் வரை எதிலும் ஊழல், முறைகேடுகள். இனிமேல் இதை சீர் செய்யவே முடியாது என்பது இன்றய நிலை. அந்த அளவிற்கு விஷயங்கள் சென்று விட்டன.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. சரி யார் பொறுப்பில் கொண்டுவரலாம்? "கோவில் சொத்துக்களில் அறங்காவலர்கள் அல்லது அதிகாரிகளின் துாண்டுதலில் ஊழல் நடக்கிறது".என்று நீதி மன்றம் சொல்கிறது குறையை சொல்லிக் கொண்டே இருப்பதைவிட சரியான தீர்வை சொல்லலாம் எனவே ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைக்கலாமா?...
Rate this:
Cancel
Karuppiah - ????????,இந்தியா
27-நவ-202119:11:19 IST Report Abuse
Karuppiah 60 வருஷத்துக்கு மேலாக எப்டி . அந்த ஏரியா தாதாவா இருப்பாரோ குத்தகைதாரர்
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
27-நவ-202111:55:50 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இந்துக்களின் சொத்துக்கள் மட்டிலுமே இந்த அக்கிரம அநியாயம் நடக்கிறது ,,மற்ற மத ஆட்டக்களம் திராவிட கும்பலின் துணையோடு பனங்களை லஞ்சமாக கொட்டி இந்துக்கோவில்கயம் அது சம்பத்தப்பட்ட இடங்களையும் கொள்ளை அடிக்கிறார்கள் இளிச்சவாய இந்துக்கள் இன்னும் திராவிட கொள்ளை கும்பலுக்கு வாக்கு வழங்கி அழிந்து கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X