பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று(நவ.,27) மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், தென்காசி, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை


சென்னை : வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், தென்காசி, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.




latest tamil news


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மிக கனமழை மாவட்டங்கள்



சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருநெல்வேலி
தூத்துக்குடி
தென்காசி


கன மழை மாவட்டங்கள்


கன்னியாகுமரி
ராமநாதபுரம்
திருச்சி
கரூர்
நீலகிரி
கோவை


latest tamil news



இவை தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்தவரை


அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்பட்ச வெப்பநிலை 25டிகிரி செல்சியஸ் இருக்கும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை



வங்க கடல் பகுதிகள்



குமரிக்கடல், தென்மேற்கு வங்ககடல், மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு நா.புவியரசன் வானிலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
27-நவ-202110:16:27 IST Report Abuse
Bala Murugan தூத்துக்குடியில் பெரிய அளவில் மழை கிடையாது. சில பகுதிகளில் தேங்கிய மழை நீரை மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வெள்ளமாக இருக்கிறது என்று சொல்வது. பள்ளிகளில் தேங்கிய மழை நீரை பொது சாலைகளில் வெளியேற்றி குளம் போல காட்சியளிப்பது. அதிக மழை பெய்தால் சாலை எது சாக்கடை எது என்று பழகிய பாதையே குழப்பம் தருகிறது. வெயில் காலத்தில் சும்மா இருந்து விட்டு மழைக் காலத்தை ஒட்டித்தான் சாலை வேலைகள் ஜரூராக நடக்கும்.
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
27-நவ-202110:00:04 IST Report Abuse
Bala Murugan தூத்துக்குடியில் நேற்று முன்தினம் பள்ளி கல்லூரிகள் இயங்கின.எதிர்பாராமல் மழை காலையில் இருந்து மாலை வரை பொழிந்தது. உடனே அன்று இரவு (வியாழன்) ரெட் அலெர்ட் கொடுத்து வெள்ளி, சனி விடுமுறை விட்டார்கள். நேற்று (வெள்ளி) சுத்தமாக மழை இல்லை. ஒன்றும் மழை இதுவரை இல்லை. ஆனால் விடுமுறை. பள்ளி,கல்லூரிகள் இயங்கினால் மழை பொழியுது. விடுமுறை விட்டால் மழை இல்லை. ஹீஹீஹீ. மழை பொழிவை பார்த்துத்தான் ரெட் அலெர்ட் ஒழிய ரெட் அலெர்ட் என்பதால் மழை இல்லை. ஹீஹீஹீஹீ.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
27-நவ-202109:42:15 IST Report Abuse
Sampath Kumar நல்லார் ஒருவர் உண்டு என்றால் அவர் பொருட்ட்டு எல்லாருக்கும் பேயும் மலை தமிழ்நாட்டில் நிறைய நல்லவங்க இருக்காங்க போல மலை கொட்டி தீர்க்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X