கலப்பு: பல லட்சம் கன அடி உபரி நீர் கடலில்...விவசாயிகள், பொதுமக்கள் கவலை

Added : நவ 27, 2021 | கருத்துகள் (1)
Advertisement
திண்டிவனம்-மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கன மழையால், நிமிடத்திற்கு 20 ஆயிரம் கன அடி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருக்கிறது. மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், 80 சதவீதம் பேர் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர்.இப்பகுதிகளில் நடைபெறும் விவசாயம்
 கலப்பு: பல லட்சம் கன அடி உபரி நீர் கடலில்...விவசாயிகள், பொதுமக்கள் கவலை

திண்டிவனம்-மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கன மழையால், நிமிடத்திற்கு 20 ஆயிரம் கன அடி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.



விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருக்கிறது. மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், 80 சதவீதம் பேர் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனர்.இப்பகுதிகளில் நடைபெறும் விவசாயம் பெரும்பாலும் வீடூர் அணைக்கட்டில் இருந்து வரும் நீர் மற்றும் ஏரிப்பாசனத்தையே நம்பி உள்ளது. விவசாயத்திற்கு முக்கியமாக கருதப்படும் மழைநீரை சரியாக சேமிக்க முடியாமல் பல லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலக்கும் நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

கடந்த 20 நாட்களாக கொட்டிய கனமழையால், திண்டிவனம், வானுார், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாக்களுக்குட்பட்ட 288 ஏரி, 1,000க்கும் மேற்பட்ட குளங்கள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.இப்படி வெளியேறும் உபரி நீரின் அளவு மட்டுமே ஒரு நிமிடத்திற்கு 20 ஆயிரம் கன அடி நீர் என பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பினர் கூறுகின்றனர்.அப்படியென்றால் நாளொன்றுக்கு பல லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் சேருகிறது.கன மழையால் திண்டிவனம் கிடங்கல் ஏரி, வானுார், மரக்காணம், மயிலம் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் நல்லாவூர், நரசிம்மாறு வழியாக பயணித்து, மரக்காணம் கழுவெளியில் கலந்து, செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆலம்பரா கோட்டை அருகே கடலில் கலக்கிறது.செஞ்சி, மேல்மலையனுாரில் இருந்து வரும் உபரி நீர் வீடூர் அணைக்கட்டு வழியாக வெளியேறி புதுச்சேரி சங்கராபரணி ஆறு வழியாக பயணித்து புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே கடலில் கலக்கிறது.இப்படி பல லட்சம் கன அடி நீர் இருவேறு ஆறுகள் வழியாக கடந்த 25 நாட்களாக கடலில் கலந்து வீணாவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஏரி, குளங்கள் துார் வாரப்படாததுதான்.கடந்த 2011ஆம் ஆண்டு உலக வங்கி நிதியுதவியுடன் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் துார் வாரப்பட்டுள்ளது.

அதன் பிறகு ஒரு சில ஏரிகள் மட்டுமே முன்னுரிமை அளித்து துார் வாரியுள்ளனர். 10 ஆண்டுகளாக பெரிய அளவில் ஏரிகள் துார் வாரப்படவில்லை.இவை துார்வாரப்பட்டிருந்தால் பல லட்சம் கன அடி மழைநீர் கடலில் சென்று கலக்காமல் சேமித்து வைத்திருக்க முடியும். ஆனால் இதைப்பற்றி அரசு அதிகாரிகளோ அல்லது அரசியல் பிரமுகர்களோ கவலைப்படுவதாக தெரியவில்லை.ஏரி, குளங்கள் துார் வாருவது மட்டுமின்றி, மாவட்டத்தில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டால் மட்டுமே வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து விவசாயத்தை செழிப்படையச் செய்ய முடியும் என விவசாயிகள், பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
27-நவ-202121:07:18 IST Report Abuse
Ram All water drained to sea. Come April May, fight with Karnataka.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X