பள்ளியில் திருடிய 3 பேர் கைதுதிண்டிவனம்: கீழ்மாவிலங்கை அரசு நடுநிலைப்பள்ளியில், 3 லேப்டாப்கள், ஒரு எல்.இ.டி., டிவி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருடு போனது.புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தாதாபுரம் கூட்ரோடு சந்திப்பில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் டிவி., எடுத்து வந்த 3 பேரிடம் விசாரித்தனர். அதில், கீழ்மாவிலங்கை வேலாயுதம் மகன் லோகநாதன், 23; ரத்தினவேல் மகன் ராஜவேல், 20; புருேஷாத்தம்மன் மகன் எட்டியப்பன் (எ) லாரன்ஸ், 22; என்பதும், மூவரும் சேர்ந்து கீழ்மாவிலங்கை அரசு பள்ளியில் லேப்டாப், எல்.இ.டி., டிவி திருடியதை ஒப்புக் கொண்டனர். உடன் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.கேட் கீப்பர் மாயம்விழுப்புரம்: தாயுமானவர் தெருவைச் சேர்ந்தவர் தார்சுஸ் ஆரோக்கியராஜ். 30; வளவனுார் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 23ம் தேதி வீட்டிலிருந்து ஓட்டலுக்கு டிபன் வாங்கச் சென்ற தார்சுஸ் ஆரோக்கியராஜ் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இருவர் மீது வழக்குவிழுப்புரம்: கண்டாச்சிபுரம் அடுத்த தாயனுாரைச் சேர்ந்தவர் ராசு, 42; இவரது சகோதரர் பிச்சைக்காரன். இருவருக்குமிடையே பூர்வீக நிலம் பாகப்பிரிவினை செய்ததில் முன்விரோதம் உள்ளது. கடந்த 24ம் தேதி ஏற்பட்ட தகராறில், பிச்சைக்காரன், அவரது மகன் வெங்கடேசன் ஆகியோர் ராசுவை திட்டி தாக்கினர். புகாரின்பேரில், பிச்சைக்காரன், வெங்கடேசன் மீது அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.மாணவி மாயம்விழுப்புரம்: எஸ்.பில்ராம்பட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அலமேலு, 21; திருவண்ணாமலை அரசு கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி கல்லுாரிக்குச் சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில், அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ஆவின் பாலகத்தில் திருட்டுமயிலம்: வீடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் 38; மாற்றுத் திறனாளியான இவர், கூட்டேரிப்பட்டு - புதுச்சேரி சாலை, மயிலம் இன்ஜினியரிங் கல்லுாரி அருகே ஆவின் பாலகம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை அவரது உறவினர் கோவிந்தன் கடையைத் திறக்க வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 5,000 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பைக்குகள் பறிமுதல்விழுப்புரம்: டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி, வி.மருதுார் ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அங்கு 6 பைக்குகள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, 6 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.ஆற்றில் விழுந்து விவசாயி பலிவிழுப்புரம்: செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரோமன் கிலமண்ட்ஸ், 44; விவசாயி. இவர், நேற்று காங்கேயனுார் பம்பை ஆற்றில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றார். கால் கழுவச் சென்றபோது, நிலைதடுமாறி ஆற்றில் விழுந்து, நீரில் மூழ்கி இறந்தார். புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.