தரைப்பாலம்: அமைச்சர் பார்வை| Dinamalar

தரைப்பாலம்: அமைச்சர் பார்வை

Added : நவ 27, 2021 | |
அவலுார்பேட்டை-கீழ்வைலாமூரில் தரைப்பாலத்தை அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார்.செஞ்சி அடுத்த கீழ்வைலாமூரில் வராக நதி செல்லும் தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகளவில் செல்லும் போது போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் மஸ்தான் தரைப்பாலத்தை பார்வையிட்டார். பின்,
 தரைப்பாலம்: அமைச்சர் பார்வை

அவலுார்பேட்டை-கீழ்வைலாமூரில் தரைப்பாலத்தை அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார்.செஞ்சி அடுத்த கீழ்வைலாமூரில் வராக நதி செல்லும் தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகளவில் செல்லும் போது போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.இது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் மஸ்தான் தரைப்பாலத்தை பார்வையிட்டார். பின், தரைப்பாலத்தை உயர் மட்ட பாலமாக அமைக்க நடவடிக்கை எடுப்படும் என உறுதியளித்தார். வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.திண்டிவனம்கனமழையால் சேதமடைந்த நாகலாபுரம் தரைப்பாலம், வகாப் நகர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் மஸ்தான் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் நகராட்சி பகுதியில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெள்ள பாதிப்புகளை உடனடியாக சீர் செய்யும் வகையில் ஜே.சி.பி., இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X