லாலு உடல்நிலை திடீர் பாதிப்பு: எய்ம்ஸ் ஐ.சி.யூ.,வில் அனுமதி!

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புது டில்லி: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் இருக்கும் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு நேற்று இரவு (நவ., 26) திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த லாலு பிரசாத்திற்கு உடல்நிலை காரணமாக


புது டில்லி: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் இருக்கும் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு நேற்று இரவு (நவ., 26) திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.



latest tamil news


டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்று 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருந்த லாலு பிரசாத்திற்கு உடல்நிலை காரணமாக ஜாமின் வழங்கப்பட்டது. டில்லியில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்து எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வந்தார்.


கடந்த சில தினங்களுக்கு முன் மற்றொரு கால்நடை தீவன வழக்கிற்காக பாட்னா வந்தார். சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உடல்நிலைக் காரணமாக ஆஜராவதிலிருந்து விலக்கு கோரினார். அதனை நீதிபதி ஏற்று வக்கீல் மூலமாக தங்கள் தரப்பு வாதங்களை வழங்கலாம் என்றார்.


latest tamil news



கடந்த புதனன்று தனது பாட்னா இல்லத்தில் தான் வாங்கிய முதல் ஜீப்பை தானே இயக்கி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விமானம் மூலம் டில்லி அழைத்துச் சென்று பிற்பகலில் எய்ம்ஸில் அனுமதித்துள்ளனர்.


அங்கு அவசர சிகிச்சையில் சேர்த்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
27-நவ-202120:24:34 IST Report Abuse
Subramaniyam Veeranathan ஆது சரி தண்டனை குற்றவாளிகளுக்கு நல்ல நாட்டுமக்களின் வரி பணத்தை ஏன் வீணாக செலவுசெய்யவேண்டும். அவர்களின் சொந்தச் செலவில் ஏன் வைத்தியம் பார்க்கக்கூடாது. ஏன் இவர்களை சாதாரண மருத்துவமனைகளில் வைத்தியம் பார்க்க அனுமதிக்க காட்டாயப்பதுத்தக்கூடாது?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
27-நவ-202120:08:38 IST Report Abuse
Barakat Ali மத்தியில் பிஜேபி ஆட்சி இல்லை என்றால் இவர் சுதந்திர பறவையாக உலா வருவார்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
27-நவ-202118:29:12 IST Report Abuse
r.sundaram கடவுள் தந்த தண்டனை இது. உடல் நிலையை காரணம் காட்டி சிறையில் இருந்து வெளியில் வந்து விட்டு, வீட்டில் அரசியல் செய்வது, தனது ஜீப் என்று தான் ஓட்டுவது என்று நடந்து கொண்டால், அது அந்த கவுளுக்கே பொறுக்க வில்லை போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X